Last Updated : 27 Mar, 2019 11:08 AM

 

Published : 27 Mar 2019 11:08 AM
Last Updated : 27 Mar 2019 11:08 AM

அரசியல் கட்சிகள் மீது நம்பிக்கேயே இல்லை; ராணுவம், நீதித்துறை மீது நம்பிக்கை அதிகம்: சுவாரஸ்ய கருத்துக்கணிப்பு

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், 12 மாநிலங்களில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் தேசத்தில் நம்பிக்கையற்ற அமைப்பாக அரசியல் கட்சிகளைத் தான் மக்கள் கூறியுள்ளார்கள். அதேசமயம், ராணுவம், நீதித்துறை மீது மக்களுக்கு அதிகமான நம்பிக்கை இருக்கிறது.

தேசத்தில் அரசியல் கட்சிகள் மீதுதான் மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் மைனஸ் 55 சதவீதம் எதிர்மறையாக மதிப்பளித்துள்ளார்கள்கள். இந்த ஒருஅமைப்புதான் மக்களின் நம்பிக்கையை பெறாமல் நெகடிவ்ரேட்டிங்கில் இருக்கிறது.

இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 5 பேரில் ஒருவர், தேசத்தில் எதிர்காலத்தில் வேலைவாய்ப்பின்மைதான் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

தேர்தல் 2019-க்கு இடையே மக்களும் சமூகமும் என்ற தலைப்பில் லோக்நிதி-சிஎஸ்டிஎஸ் மற்றும் அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் இணைந்து இந்த கருத்துக்கணிப்பை நடத்தின. இந்த கருத்துக்கணிப்பில் அசாம், ஜம்மு காஷ்மீர், கேரளா, மிசோரம், நாகாலாந்து, பஞ்சாப், தமிழகம், திரிபுரா, உ.பி., உத்தரகாண்ட், மேற்கு வங்கம், டெல்லி ஆகிய 12 மாநிலங்களில் இருந்து தலா 2 ஆயிரம் மக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது.

இதற்கு முன் கடந்த 2 முறை 12 மாநிலங்களில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளநிலையில், அனைத்து தரவுகளையும் ஒருங்கிணைத்து முழுமையான ஆய்வுக்கு ஆய்வாளர்கள் உட்படுத்த உள்ளனர்.

இந்த கருத்துக் கணிப்பின் முடிவுகள் நேற்று  வெளியிடப்பட்டன. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 20 சதவீதம் பேர், வேலையின்மைதான் இந்த தேசம் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர். 15 சதவீதம் பேர், வேலையின்மையைப் போக்க அரசு அதிகமான முக்கியத்துவம் எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

3-வதாக 15 சதவீதம் பேர் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியத்துவமும், சட்டம், நிர்வாகம், மற்றும் ஊழல் ஒழிப்பு பிரச்சினையாக 13 சதவீதம் ஆதரவும் தெரிவித்துள்ளனர்.

அகதிகளால் வளர்ச்சி பாதிக்காது

இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 60 சதவீதம் பேர், நாட்டின் வளர்ச்சியை சிறுபான்மையினரோ, புலம்பெயர்ந்து, அகதிகளாக வருபவர்களால் நாட்டின் வளர்ச்சி ஒருபோதும் பாதிக்காது, சக்திவாய்ந்த, அதிகாரம் மிக்கவர்களால்தான் நாட்டின் வளர்ச்சி தடைபடும் என்று தெரிவித்துள்ளனர். இந்த மனநிலை இளைஞர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.

35-வயதுக்கு கீழ்பட்ட 61 சதவீதம்பேர், பணக்காரர்களால், உயர்மட்ட வகுப்பில் இருப்பவர்களால்தான் தேசத்தி வளர்ச்சி, தடைபடுகிறது எனத் தெரிவித்துள்ளனர். 35 வயதுக்கு மேற்பட்டவர்களில் 61 சதவீதம் பேரும் இதை கருத்தை முன்வைத்துள்ளனர்.

அரசுப்பள்ளிகளில் பிள்ளைகளுக்கு இடம் கிடைப்பதும், குடிநீர் இணைப்பும் விரைவாக கிடைத்து விடுகிறது என மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் பெரும்பாலும் சாதியின் பெயரை அடையாளமாக வைக்க பெருமைப்படுகின்றனர், சமீபகாலமாக மதரீதியான அடையாளம் அதிகரித்துள்ளது.

ராணுவம் மீது நம்பிக்கை அதிகம்

நாட்டிலேயே மிகவும் நம்பிக்கை கொண்ட அமைப்பாக ஆய்வில் பங்கேற்றவர்கள் இந்திய ராணுவத்தையே கருதுகிறார்கள், 88 சதவீதம் பேர் ராணுவத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர்.

அடுத்தார்போல், நீதிமன்றங்கள் மீது 60 சதவீதம் பேரும் நம்பிக்கை வைத்துள்ளனர். இதில் ராணுவத்துக்கு அடுத்த  இடத்தில் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட நீதிமன்றம் ஆகியவைமீது நம்பிக்கை அதிகரித்துள்ளது.

6-வது இடத்தில் குடியரசுத் தலைவர், 7-வது இடத்தில் நாடாளுமன்றம், 8-வது இடத்தில் தாசில்தார், 9-வது இடத்தில் சட்டப்பேரவை, 10-வது கிராமப்பஞ்சாயத்தும் உள்ளன. தேசத்தில் மக்கள் நம்பிக்கை இல்லாத அமைப்பாக அரசியல்கட்சிகளைத்தான் கருதுகிறார்கள் 55 சதவீதம் பேருக்கு அரிசியல் கட்சிகள மீது நம்பிக்கையை இல்லை. நிகர வாக்கு அடிப்படையில் கணக்கி்ட்டால், மைனஸ் நெகட்டிவ் முறையில் அரசியல் கட்சிகளுக்கு மதிப்பெண்கள் இல்லை.

பாரத் மாதா கி ஜெய், மாட்டிறைச்சி

பொது நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் பாடாமல் இருப்பது, பாரத் மாதா கி ஜெய் கூறாமல் இருப்பவர்களை தண்டிக்கலாம் என்று உ.பி. உத்தரகாண்ட், தமிழகம், டெல்லி, அசாம் மக்கள் தெரிவித்துள்ளார்கள். ஆனால், நாகாலாந்து, ஜம்முகாஷ்மீர், கேரளா, மிசோரம், திரிபுரா, பஞ்சாப், மே.வங்கம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் தண்டனை வழங்க எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களுக்கு தண்டனை அளிக்கும் முடிவுக்கு ஜம்மு காஷ்மீர், நாகாலாந்து, மிசோரம் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மற்ற 9 மாநிலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x