Last Updated : 21 Mar, 2019 07:08 PM

 

Published : 21 Mar 2019 07:08 PM
Last Updated : 21 Mar 2019 07:08 PM

1,200 ஆண்டுகால அடிமைத்தளை என்று பிரதமர் கூறியது எதை? தேர்தல் பிரச்சாரத்தில் ஓவைஸி விளக்கம்

சம்ஜோதா ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் இருந்து அசீமானந்த் 4 பேரை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் ஆசாசுதின் ஒவைஸி பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கேள்வி எழுப்பியுள்ளார்.

 

மோடியின் ‘நானும் காவலாளிதான்’ என்ற பிரச்சாரத்தைத் தாக்கிப் பேசிய ஓவைசி நேற்று இரவு தேர்தல் பிரச்சாரத்தில் பேசும்போது, “நீங்கள் என்ன மாதிரியான காவலாளி மோடி? சம்ஜோதா ரயில் குண்டு வெடிபில் 25 இந்தியர்கள் பலியாகினர்,  குண்டு வெடிப்பு பயங்கரவாதத் தாக்குதல், நீங்கள் எப்படி காவலாளி ஆவீர்கள்?

 

மோடி உண்மையில் தேசத்தின் ‘காவலாளி’ என்றால் சுவாமி அசீமாநந்தா விடுவிப்பு உத்தரவை எதிர்த்து மத்திய அரசு உடனடியாக மேல்முறையீடு செய்திருக்க வேண்டுமே! நீங்கள் என்ன மாதிரியான சவுகிதார்? அசீமாநந்தாவைக் கண்டு ஏன் பயப்படுகிறீர்கள்? அவர் மீது ஏன் இந்தப் பிரியம்? அதுவும் ஒரு கட்டத்தில் அசீமானந்த் ஆர்.எஸ்.எஸ். உடன் இருந்தவர் என்று உங்களுக்குத் தெரிந்திருந்தும் ஏன் மவுனம்?

 

இந்த நாட்டுக்குக் காவலாளி தேவையில்லை, இந்த நாட்டுக்குத் தேவை நேர்மையான பிரதமர். நாட்டுக்கு இப்போது தேவை இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் புரிந்து கொள்ளும் ஒரு நபரே. அதன் உணர்வு மதச்சார்பின்மை, நீதி, சகோதரத்துவம் மற்றும் சுதந்திரம்.

 

பிரதமர் நரேந்திர மோடி தன் வாழ்க்கையின் 25-30 ஆண்டுகளை ஆர்.எஸ்.எஸ்.-ல் கழித்துள்ளார், ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் எழுதிய புத்தகங்களில் எல்லாம் நாட்டின் பன்முகக் கலாச்சாரத்துக்கு அவர்கள் எதிரி என்பதையே பதிவு செய்துள்ளனர்.

 

நாடாளுமன்றத்தில் தன் முதல் உரையிலேயே நரேந்திர மோடி, 1,200 ஆண்டுகால அடிமை வாழ்க்கைக்குப் பிறகு நமக்கு அதிகாரம் கிடைத்தது என்று பேசியவர்தான்.

 

அப்போது என் அருகில் ஒரு எம்.பி அமர்ந்திருந்தார், அவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவராக இருக்கலாம், அவர் என்னிடம் கேட்டார், இது என்ன 1200 ஆண்டுகால அடிமைத்தனம்? என்றார், நான் அவருக்குக் கூறினேன், டெல்லியை முஸ்லிம்கள் ஆண்டதைக் குறிப்பிடுகிறார் என்றேன்.  அதைத்தான் அடிமை ஆண்டுகள் என்று குறிப்பிட்டார் என்றேன்.

 

ஆனால் இதே ‘அடிமைக் காலக்கட்டத்தில்தான், செங்கோட்டையும் , தாஜ்மகாலும் கட்டப்பட்டன.

 

இவ்வாறு கூறினார் ஓவைசி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x