Published : 28 Mar 2019 07:19 AM
Last Updated : 28 Mar 2019 07:19 AM

மத்திய அமைச்சர் ஜுவல் ஓரமின் அசையா சொத்துகள் 3 மடங்கு உயர்வு

பாஜக மூத்த தலைவரும் மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சருமான ஜுவல் ஓரமின் அசையா சொத்துகள் கடந்த 5 ஆண்டுகளில் 3 மடங்கு உயர்ந்துள்ளது. இதே காலத்தில் அவரது மனைவியின் அசையா சொத்து மதிப்பு 4 மடங்கு உயர்ந்துள்ளது.

கடந்த 2014-15-ல் ஜுவல் ஓரமின் ஆண்டு வருமானம் ரூ.8.68 லட்சமாக இருந்தது. இது தற்போது (2018-19) ரூ.13.23 லட்சமாக உயர்ந்துள்ளது. இதுபோல் அவரது மனைவி ஜிங்கியா ஓரமின் ஆண்டு வருமானம் ரூ.4.47 லட்சத்தில் இருந்து ரூ.7.60 லட்சமாக உயர்ந்துள்ளது.  கடந்த 2014-ல் ஜுவல் ஓரமின் அசையா சொத்து மதிப்பு ரூ.90 லட்சமாகும். தற்போது இது ரூ.2.74 கோடியாக உயர்ந்துள்ளது.

இதுபோல் ஜிங்கியாவின் அசையா சொத்துகள் ரூ.50 லட்சத்தில் இருந்து ரூ.2.03 கோடியாக உயர்ந்துள்ளது.

ஜுவல் ஓரம் மற்றும் அவரது மனைவி கடந்த 2014-ல் கணக்கு காட்டிய சொத்துகளின் சந்தை மதிப்பு தற்போது கூடியுள்ளது. இது தவிர புதிதாக 3 சொத்துகளை இருவரும் வாங்கியுள்ளனர்.

ஒடிசா மாநிலத்தின் சுந்தர்கார் தொகுதியில் ஜுவல் ஓரம் நேற்று முன்தினம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.ஜுவல் ஓரம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x