பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.15 ஆயிரம் கோடி பண மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வரும் தொழிலதிபர் நீரவ் மோடியிடம் டெலிகிராஃப் பத்திரிகையாளர் எடுத்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பண மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நீரவ் மோடி லண்டனில் வெஸ்ட் என்ட் பகுதியில் 80 லட்சம் பவுண்ட் மதிப்புள்ள ஒரு 3 படுக்கை அறை கொண்ட சொகுசு குடியிருப்பில் வசிப்பதாக தி டெலிகிராஃப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
மிக் பிரவுன் என்ற பத்திரிகையாளர் அந்த பேட்டியை எடுத்துள்ளார். இந்நிலையில் அந்த வீடியோ பேட்டி வைரலாகி வருகிறது.
அந்த பேட்டி விவரம்:
மிக் பிரவுன்: நீங்கள் அரசிடம் அடைக்கலம் கோரியுள்ளீர்களா? அதை நான் உறுதிப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்
நீரவ் மோடி: சாரி நோ கமென்ட் (மன்னிக்கவும் சொல்வதற்கு ஒன்றுமில்லை)
மிக் பிரவுன்: நீங்கள் நிறைய பேருக்கு நிறையவே கடன் பாக்கி வைத்திருக்கிறீர்கள் அல்லவா?
நீரவ் மோடி: சாரி நோ கமென்ட் (மன்னிக்கவும் சொல்வதற்கு ஒன்றுமில்லை)
மிக் பிரவுன்: நீங்கள் எங்கு தங்கியிருக்கிறீர்கள் என்று நாங்கள் தெரிந்து கொள்ளலாமா?
நீரவ் மோடி: சாரி நோ கமென்ட் (மன்னிக்கவும் சொல்வதற்கு ஒன்றுமில்லை)
மிக் பிரவுன்: நீங்கள் எவ்வளவு காலம் இங்கிலாந்தில் தங்க திட்டமிட்டிருக்கிறீர்கள்?
நீரவ் மோடி: சாரி நோ கமென்ட் (மன்னிக்கவும் சொல்வதற்கு ஒன்றுமில்லை)
மிக் பிரவுன்: நீங்கள் அரசாங்கத்திடம் அடைக்கலம் கோரியுள்ளதாக அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். நீங்கள் நாடுகடத்தப்படக்கூடிய நபர் என்றும் அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். அதுதான் உண்மை என்றால் சற்று உங்கள் தலையை மட்டும் அசைக்க முடியுமா?
நீரவ் மோடி: சாரி நோ கமென்ட் (மன்னிக்கவும் சொல்வதற்கு ஒன்றுமில்லை)
மிக் பிரவுன்: எந்தக் கேள்விக்குமே நீங்கள் பதில் சொல்ல விரும்பவில்லையா?
மிக் பிரவுன்: எவ்வளவு நாள் இங்கிலாந்தில் தங்கியிருக்கவுள்ளீர்கள்?
மிக் பிரவுன்: எவ்வளவு நாள் தங்கியிருப்பீர்கள் என்று சொல்லமாட்டீர்களா?
மிக் பிரவுன்: நீங்கள் (---) (ஒரு நபரின் பெயர் சொல்லப்படுகிறது) அவரின் நண்பரா. அவர் உங்கள் கூட்டாளியா?
நீரவ் மோடி: சாரி நோ கமென்ட் (மன்னிக்கவும் சொல்வதற்கு ஒன்றுமில்லை)
மிக் பிரவுன்: பதில் சொல்லமுடியாதா
நீரவ் மோடி: நோ கமென்ட்
மிக் பிரவுன்: நீங்கள் இன்னமும் வைர வியாபாரம் செய்கிறீர்களா மோடி? நீங்கள் ------ (ஒரு பெயர் சொல்லப்படுகிறது) என்ற பெயரில் வைர வியாபாரம் செய்கிறீர்களா? அது உண்மையா?
நீரவ் மோடி: நோ கமென்ட்
அத்துடன் ஒரு வாடகைக் காரில் ஏறி சென்றுவிடுகிறார்.