அயோத்தியில் ராமர் கோயில் கட்ட மத்திய அரசு தீவிரமாக உள்ளது: ஆர்.எஸ்.எஸ். கருத்து

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட மத்திய அரசு தீவிரமாக உள்ளது: ஆர்.எஸ்.எஸ். கருத்து
Updated on
1 min read

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட மத்திய அரசு உறுதிபூண் டுள்ளது என்று ஆர்.எஸ்.எஸ். தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேசம், குவாலியரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில பாரதிய பிரதிநிதி சபை மாநாடு நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த மாநாடு நேற்று நிறைவடைந்தது. இதன்பின் ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி நிருபர்களிடம் கூறியதாவது:

அயோத்தி ராமர் கோயில் தொடர்பான எங்களது கொள்கை களில் எவ்வித மாற்றமும் இல்லை. ராமர் கோயில் இருந்த அதே இடத்தில் மீண்டும் கோயில் கட்ட வேண்டும். இதில் சமரசத்துக்கு இடமில்லை.

ராமர் கோயில் கட்ட மத்தியில் ஆளும் பாஜக அரசு உறுதிபூண்டுள்ளது. இதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அயோத்தி பிரச்சினைக்கு தீர்வு காண 3 பேர் அடங்கிய சமரச குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்திருப்பதை வரவேற்கிறோம். இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும்.

பாகிஸ்தானின் பாலகோட் தீவிரவாத முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தி யதை வரவேற்கிறோம். மத்தியில் ஆளும் பாஜக அரசு, சமூக விரோதிகளை அழிப்பதில் பாராட் டும்வகையில் செயல்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in