வெள்ளத்தால் ஜம்மு காஷ்மீரில் 40 கி.மீ. நீள எல்லை வேலி சேதம்

வெள்ளத்தால் ஜம்மு காஷ்மீரில் 40 கி.மீ. நீள எல்லை வேலி சேதம்
Updated on
1 min read

ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லை மற்றும் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சுமார் 40 கிலோ மீட்டர் நீளத்துக்கு 3 அடுக்கு எல்லை வேலி வெள்ளத்தால் சேதம் அடைந்துள்ளது.

இதனை தீவிரவாதிகள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு ஊடுருவும் வாய்ப்புள்ளதால் வேலியை சீரமைக்கும் பணியில் ராணுவம் முழு மூச்சில் ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறும்போது, “காஷ்மீர் மற்றும் ஜம்மு பிராந்தியத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியின் பல்வேறு இடங்களில் 20 முதல் 25 கி.மீ. நீளத்துக்கு எல்லை வேலி வெள்ளத்தால் சேதம் அடைந்துள்ளது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in