கவர்னர் பதவியேற்ற 9 மாதங்களில் 52 ஆயிரம் புகார்கள் மீது நடவடிக்கை: காஷ்மீர் அரசு பெருமிதம்

கவர்னர் பதவியேற்ற 9 மாதங்களில் 52 ஆயிரம் புகார்கள் மீது நடவடிக்கை: காஷ்மீர் அரசு பெருமிதம்
Updated on
1 min read

காஷ்மீரில் மெஹ்ஃபூபா தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி அரசு கலைக்கப்பட்ட பிறகு அரசுக்கு வந்த 52 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கவர்னர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2018 ஜூன் மாதம் மெஹ்ஃபூபா தலைமையிலான பாஜக-மஜக அரசின் ஆட்சி கலைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இம்மாநிலத்தில் கடந்த 9 மாதங்களாக சத்ய பால் மாலிக் கவர்னராக பொறுப்பேற்று பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் மக்கள் குறைகளை கேட்டறிந்து அவர்களின் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கவர்னர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கவர்னரின் செய்தித் தொடர்பாளர் இதுகுறித்து தெரிவித்தாவது:

கடந்த 2018, ஜூன் 20லிருந்து கிட்டத்தட்ட 52,452 புகார் மனுக்கள் பெறப்பட்டன. இவற்றின் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய தலைமை அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. தற்போது எங்களிடம் 443 மனுக்கள் மட்டுமே நடவடிக்கைகள் மேற்கொள்ளும்பொருட்டு பரிசீலனையில் உள்ளன. மற்றபடி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் கடந்த 9 மாதங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

இவ்வளவு விரைவாக மக்கள் குறைகளைக் கேட்டறிந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட காரணம், கவர்னர் தன்னுடைய 4 ஆலோசகர்களுடனும் தொடர்ந்து நடத்திவரும் ஆய்வுக் கூட்டங்கள். இவற்றின்மூலம் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி எங்களிடம் வரும் அனைத்து மனுக்களும் தவறாமல் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன. அவை உடனடி நடவடிக்கைகளுக்காக உரிய தலைமை அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

இவ்வாறு கவர்னரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in