டாம் வடக்கன்? அவர் ஒன்றும் பெரிய தலைவர் அல்ல: கண்டுகொள்ளாத ராகுல் காந்தி

டாம் வடக்கன்? அவர் ஒன்றும் பெரிய தலைவர் அல்ல: கண்டுகொள்ளாத ராகுல் காந்தி
Updated on
1 min read

சோனியாவின் முன்னாள் அரசியல் செயலாளரும், காங்கிரஸ் தலைவருமான டாம் வடக்கன் பா.ஜனதாவில் இணைந்ததை ஒரு பெரிய நிகழ்வாக பொருட்படுத்தாமல் கருத்து தெரிவித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

கேரளாவின் திருச்சூரை சேர்ந்த காங்கிரஸ் தலைவர், டாம் வடக்கன். கத்தோலிக்க கிறிஸ்தவரான இவர் காங்கிரஸ் கட்சியில் செய்தி தொடர்பாளராக பதவி வகித்து வந்தார். சோனியாவுக்கு மிக நெருக்கமாக இருந்த டாம் வடக்கன், அவரது அரசியல் செயலாளராகவும் இருந்துள்ளார். இவ்வாறு காங்கிரசின் முன்னணி தலைவராக இருந்த டாம் வடக்கன், திடீரென பா.ஜனதாவில் இணைந்தார். டெல்லியில் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் முன்னிலையில் தன்னை பா.ஜனதாவில் இணைத்துக் கொண்டார். பின்னர் கட்சித்தலைவர் அமித்ஷாவையும் சந்தித்து பேசினார்.

கட்சியில் பெரிய பதவியில் இல்லாத போதே ராகுல் காந்தி தலையீடு இருந்தது என்று சாடிய டாம் வடக்கன் ராகுல் காந்தி தலைவரான பிறகு தன்னால் அந்தக் கட்சியில் இருக்க முடியாது என்று கூறி பாஜகவில் இணைந்துள்ளார்.

மேலும், ‘பாகிஸ்தானின் பாலகோட்டில் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய இந்திய படையினரின் நேர்மை குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்பியதால் மிகுந்த வருத்தம் அடைந்தேன். நமது மண்ணில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு காங்கிரசின் எதிர்வினை உண்மையில் கவலைக்குரியது’ என்று தன் விலகலுக்குக் காரணத்தைத் தெரிவித்தார்.

20 ஆண்டுகளாக காங்கிரஸில் இருந்த வடக்கன் பாஜகவுக்கு மாறியது பலருக்கும் அதிர்ச்சியளிப்பதாக இருந்தாலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறும்போது,

“வடக்கன்? இல்லை, இல்லை, வடக்கன் பெரிய தலைவர் கிடையாது என பதில் அளித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் வடக்கன் விலகல் தொடர்பாக முக்கியத்துவம் கொடுக்காத ராகுல் காந்தி, மோடி அரசுக்கு எதிராக மூன்று விஷயங்களை முன்னெடுக்கிறோம் என்றார், அதாவது  மிகப்பெரிய பிரச்சினை வேலைவாய்ப்பு உருவாக்குவதில் மோடியின் தோல்வி. இரண்டாவது பிரச்சினை ஊழல். ரபேல் பற்றி உங்களுக்கு தெரிந்து இருக்கும். மூன்றாவது விவகாரம் விவசாயிகள் பிரச்சினையென்று பதிலளித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in