Published : 02 Mar 2019 07:44 PM
Last Updated : 02 Mar 2019 07:44 PM

ஒரு கோடிக்கும் அதிகமான தொண்டர்கள் படை... நாடு முழுதும் 3500 பைக் பேரணிகள்: 2019 தேர்தலுக்கு அமித் ஷாவின் வியூகம் தொடங்கியது

2019 லோக்சபா தேர்தல்களை முன்னிட்டு எப்பாடுபட்டாவது வென்று விட வேண்டும் என்று காய்களை நகர்த்தி வரும் பாஜக நாடு முழுதும் மக்களைச் சந்திக்க ஒரு கோடிக்கும் அதிகமான தொண்டர்களை 3500 பைக் பேரணிகள் மூலம் ஏற்பாடு செய்துள்ளது.

 

மத்தியப் பிரதேசம் உமேரியாவில் இந்த புதிய வியூகத்தை பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தொடங்கி வைத்தார். டெல்லியில் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த புதிய வியூகத்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

 

இந்த ஊர்வலத்தின் போது ஆங்காங்கே மக்களைச் சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி அரசின் இந்த ஐந்தாண்டு சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

இது ‘வெற்றி சங்கல்ப’ அதாவது ‘விஜய் சங்கல்ப’ பேரணிக்காக உ.பி. மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கர்நாடகா, ராஜஸ்தான், ஆந்திரம், ஒடிஷா, கேரளா ஆகிய மாநிலங்களில் 3,500க்கும் மேற்பட்ட இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

 

அதாவது ஒவ்வொரு லோக்சபா தொகுதிக்கும் இந்தப் படை வந்து செல்லும்.

 

இந்த பேரணியைத் தொடங்கி வைத்துப் பேசிய அமித் ஷா வழக்கம் போல் எதிர்க்கட்சிகளை சாடினார், “நாட்டையும் பொருளாதாரத்தையும் வலுவாக்க வாக்களிக்க வேண்டிய தேர்தலாகும் இது. பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கவும், நாட்டின் வயதான அரசியல் தலைவர்களின் ஆசை பூர்த்தியாகாமல் இருக்கவும், குடும்ப இளவரசர் பிரதமராகாமல் தடுக்கவும் இந்தத் தேர்தலைப் பயன்படுத்துவோம்.

 

பிரதமர் மோடி ஆட்சியில்தான் அதிக பயங்கரவாதிகள் அகற்றப்பட்டுள்ளனர்” என்றார் அமித் ஷா.

 

நாடு இருக்கும் நிலைமையில் எப்படி பேரணிகளும், தொண்டர்களிடம் பெரிய வீடியோ கான்பரன்சிங்கையும் பாஜகவால் நடத்த முடிகிறது என்று காங்கிரஸ் கட்சி பாஜகவை விமர்சித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x