Published : 11 Mar 2019 14:51 pm

Updated : 11 Mar 2019 14:51 pm

 

Published : 11 Mar 2019 02:51 PM
Last Updated : 11 Mar 2019 02:51 PM

எத்தியோப்பியா விமான விபத்து: பலியான இந்தியரின் குடும்பத்தை தொடர்பு கொள்ள உதவுங்கள்- சுஷ்மா வேண்டுகோள்

எத்தியோப்பியா விமான விபத்தில் பலியான 4 இந்தியர்களில் ஒருவரான ஷிகா கார்க் குடும்பத்தை தொடர்பு கொள்ள உதவுமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ட்விட்டரில் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடு எத்தியோப்பியா. இந்த நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 விமானம் 149 பயணிகள், 8 ஊழியர்களுடன் உள்ளூர் நேரப்படி 8.38 மணிக்கு அடிஸ் அபாபா நகரில் இருந்து எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. நகரில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள பிஷோப்டு பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 157 பேரும் பலியானார்கள்

இந்த விமான விபத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 157 பேரும் உயிரிழந்தனர். இதில் 4 இந்தியர்களும் பலியானார்கள். பலியான இந்தியர்களில் ஷிகா கார்க் எனும் பெண் மத்திய சுற்றுச்சூழல் மற்றும்வனத்துறை அமைச்சகத்தின் சார்பில் பிரிதிநிதியாக நைரோபியில் நடக்கும் ஐநா சுற்றுச்சூழல் மாநாட்டில் பங்கேற்கச் சென்றார். அப்போது இவர் விபத்தில் சிக்கினார்.

மேலும், ஷிகா கார்க் தவிர்த்து, வைத்தியா பன்னாகேஷ் பாஸ்கர், வைத்யா ஹசின் அன்னாகேஷ், நுகவரபு மணிஷா ஆகிய இந்தியர்களும் பலியானார்கள் என்று எத்தியோப்பியாவில் உள்ள இந்தியத் தூதரகம் அறிவித்தது.

இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ட்விட்டரில் இன்று வெளியிட்ட பதிவில், " எத்தியோப்பியா விமான விபத்தில் பலியான இந்தியர்களின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்படும்" என உறுதியளித்திருந்தார்.

மற்றொரு ட்விட்டரில் சுஷ்மா கூறுகையில், " வைத்யா குடும்பத்தார் கனடாவின் டொரான்டோ நகரிலிருந்து என்னைத் தொடர்பு கொண்டார்கள். அவர்களின் குடும்பத்தில் 6 பேர் விமான விபத்தில் இதற்கு முன் பலியாகியுள்ளனர் எனும் செய்தி கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். அவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். எத்தியோப்பியா, கென்யாவில் உள்ள இந்தியத் தூதரகங்கள் உடனடியாக உங்களைத் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை அளிப்பார்கள் உங்கள் குடும்பத்துக்கு தேவையான உதவிகளை வழங்குவார்கள்.

என். மணிஷாவின் உறவினருக்கு தேவையான உதவிகளை வழங்கு மாறு நைரோபியில் உள்ள இந்தியத் துணைத்தூதர் ராகுல் சாப்ராவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது " எனத் தெரிவித்திருந்தார்.

அதேசமயம், இந்திய அதிகாரி ஷிகா கார்க் குடும்பத்தினரை மட்டும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று சுஷ்மா தெரிவித்துள்ளார். அது குறித்து அவர் கூறுகையில், " விமான விபத்தில் துரதிர்ஷ்டமாக உயிரிழந்த ஷிகா கார்க் குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறேன். அவர் கணவரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டும் முடியவில்லை. அவர்களை தொடர்பு கொள்ள யாரேனும் உதவுங்கள் " என கோரிக்கை விடுத்துள்ளார்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

    எத்தியோப்பியா விமான விபத்துஇந்தியர்கள் 4 பேர் பலிமத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ்மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்

    Sign up to receive our newsletter in your inbox every day!

    You May Like

    More From This Category

    More From this Author