ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம்

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம்
Updated on
1 min read

2015-ல் ஐ.நா. மனித உரிமை ஆணையம் அளித்த பரிந்துரைகளை முழுவதும் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, இலங்கைக்கு மீண்டும் சர்வதேச நெருக்குதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜெனீவாவில் உள்ள ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் பிரிட்டன், ஜெர்மனி தீர்மானம் தாக்கல் செய்துள்ளன.

இலங்கை போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தவும், போர்க் குற்றங்களில் ஈடுபட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் இத்தீர்மானம் வலியுறுத்துகிறது. ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்பேற்கச் செய்தல் மற்றும் மனித உரிமைகள் மேம்பாடு’என்ற தலைப்பில் இந்த தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in