Last Updated : 23 Mar, 2019 01:06 PM

 

Published : 23 Mar 2019 01:06 PM
Last Updated : 23 Mar 2019 01:06 PM

கேரள எம்எல்ஏக்கள் செயல்பாடு திருப்தி: தமிழக எம்எல்ஏக்களின் நிலை ?-  கருத்துக்கணிப்பில் தகவல்

 கேரள எம்எல்ஏக்கள் செயல்பாடு, ப ணிகள் மிகுந்த திருப்தியளிப்பதாக அந்த மாநில மக்கள் அதிகபட்சமாக கருத்துக்கணப்பில் தெரிவித்துள்ளார்கள்.

அதைத் தொடர்ந்து கோவா, தெலங்கானா எம்எல்ஏக்கள் மக்களைக் கவரும் வகையில் பணியாற்றியுள்ளனர். கடைசி இடத்தில் பிஹாரும் அதைத்தொடர்ந்து உத்தரப்பிரதேசம், தமிழகம், ஜம்மு காஷ்மீர் எம்எல்ஏக்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம், சிவோட்டர்ஸ் இணைந்து இம்மாதம் 1-ம் தேதி முதல் 18-ம் தேதிவரை நாடுமுழுவதும் 543 மக்களவைத் தொகுதிகளில் இருக்கும் 60 ஆயிரம் மக்களிடம் எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், பிரதமர் செயல்பாடு குறித்து கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

கேரள எம்எல்ஏக்களின் செயல்பாடு, பணிகள் ஆகியவை திருப்தி அளிப்பதாக அந்த மாநிலத்தைச் சேர்ந்த வாக்காளர்களில் அதிகபட்சமாக 58.1 சதவீதம் பேர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். கோவா மாநில எம்எல்ஏக்கள் செயல்பாடு திருப்தியாக இருப்பதாக 54.5 சதவீதம் வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து தெலங்கானா மாநில எம்எல்ஏக்களின் செயல்பாட்டில், பணிகளில் அந்த மாநில வாக்காளர்கள் அதிகமானோர் திருப்தி தெரிவித்துள்ளார்கள். முதல்வர்கள் குறித்த கருத்துக்கணிப்பில், தெலங்கானா முதல்வர் முதலிடத்திலும், எம்.பி.க்கள் செயல்பாட்டில் முதல் 5 இடங்களில் தெலங்கான எம்.பி.க்கள் வந்தனர் என்பது கவனிக்கத்தக்கது.

4-வது இடத்தில் குஜாராத்தை சேர்ந்த எம்எல்ஏக்களுக்கு கிடைத்துள்ளது. அந்த மாநில எம்எல்ஏக்கள் பணிகள் திருப்தி அளிப்பதாக 42.5 சதவீதம் பேர் தெரிவித்துள்ளார்கள்.

எம்எல்ஏக்கள் செயல்பாட்டிலும், பணிகளிலும் மிகக் குறைவான மனதிருப்தி அடைவதாக பிஹார், தமிழகம், உ.பி. ஆகிய மாநில மக்கள் தெரிவித்துள்ளார்கள். எம்எல்ஏக்களின் செயல்பாட்டில் சராசரியாக 15.4 சதவீதம் மக்கள் மட்டுமே திருப்தி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்கள். பஞ்சாப் மாநில எம்எல்ஏக்களின் பணிகளுக்கு 19 சதவீதம் பேர் திருப்தியும், மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளார்கள்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதி எம்.பி.க்கள் குறித்த கருத்துக்கணிப்பிலும், முதல்வர் குறித்த கருத்துக்கணிப்பும் கடைசி இடம் கிடைத்தநிலையில், எம்எல்ஏக்கள் குறித்த கணிப்பிலும் மக்கள் மத்தியில் கடைசி இடம் தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் ஜம்மு காஷ்மீர் எம்எல்ஏக்களுக்கு மட்டும் அந்த மாநில மக்கள் எதிர்மறையாக மைனஸ் 8.3 சதவீதம் மனநிறைவு பெறவில்லை என்று  தெரிவித்துள்ளார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x