Published : 27 Mar 2019 14:30 pm

Updated : 27 Mar 2019 14:30 pm

 

Published : 27 Mar 2019 02:30 PM
Last Updated : 27 Mar 2019 02:30 PM

மூழ்கும் கப்பலை மீட்கும் முயற்சி: பிரதமர் பெருமிதத்துக்கு மம்தா பதிலடி

விண்வெளியில் சாதனை நிகழ்த்தியதாக பிரதமர் மோடி பேசியது மூழ்கும் கப்பலை மீட்கும் முயற்சி என திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கூறியிருக்கிறார்.

இந்திய செயற்கைக்கோள்களை அழிக்கும் முயற்சியைத் தடுக்க ஏசாட் - ஆண்ட்டி சாட்டிலைட்டை ஏவி விண்வெளியில் சாதனை நிகழ்த்தியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.


இது தொடர்பாக மம்தா பானர்ஜி தனது ட்விட்டரில், "இந்த அரசாங்கம் காலாவதியாகிவிட்டது. இந்த நிலையில் இப்படி ஒரு மிஷனை ஏற்றுநடத்த வேண்டிய அவசரமும் இல்லை அதை பிரதமர் அறிவிக்க வேண்டிய அவசியமும் இல்லை. இது மூழ்கிக் கொண்டிருக்கும் பாஜக எனும் கப்பலுக்கு ஆக்ஸிஜன் செலுத்தும் அவசரமாகவே தெரிகிறது.

தேர்தல் ஆணையத்திடம் இது தொடர்பாக புகார் தெரிவிக்க இருக்கிறோம். தேர்தல் வேளையில் பகிரங்கமாக தனது கட்சிக்கு ஆதாயம் தேட பிரதமர் மோடி இதனை அறிவித்திருக்கிறார். இது தேர்தல் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறிய செயலாகும்.

அதேவேளையில், இஸ்ரோ மற்றும் டிஆர்டோ விஞ்ஞானிகளை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்.

இத்தகைய ஆராய்ச்சிகள் ஆண்டு தோறும் நடைபெறும் நிகழ்வுதான். ஆனால், இப்போது இந்தத் தருணத்தில் மோடி அதனை அறிவித்து தனக்கும் தனது அரசுக்கும் மகுடம் சூட்டிக் கொள்ள முயல்வது தவறானது. இதைத்தான் அவர் எப்போதும் செய்கிறார்.

இன்று உண்மையான பாராட்டுக்குரியவர்கள் விஞ்ஞானிகளே" எனப் பதிவிட்டிருக்கிறார்.


ஏசேட்விண்வெளி ஆராய்ச்சிபிரதமர் மோடிமம்தா பானர்ஜி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author