ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணிக்கு தடை

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணிக்கு தடை
Updated on
1 min read

பிரிவினைவாதி யாசின் மாலிக் தலைமையில் இயங்கும் ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன் னணி அமைப்புக்கு (ஜேகே எல்எப்) மத்திய அரசு நேற்று அதிரடி தடை விதித்துள்ளது.

தீவிரவாத தடுப்புச் சட்டத் தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.

ஜம்மு காஷ்மீரில் இயங்கி வரும் ஜம்மு-காஷ்மீர் விடு தலை முன்னணி அமைப் பானது பல தீவிரவாத இயக் கங்களுக்கு உதவி வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன.

இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்நிலை பாதுகாப்புக் குழுக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அப்போது, ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி அமைப்புக்கு தடை விதிப்பது என அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜீவ் கெளபா தெரிவித்தார்.

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தீவிரவாதத்தை ஒருபோதும் சகித்து கொள்வதில்லை என்ற மத்திய அரசின் கொள்கையின் அடிப்படையில், ஜம்மு-காஷ் மீர் விடுதலை முன்னணி அமைப்புக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜம்மு- காஷ்மீரில் பல்வேறு பிரிவினை வாத நடவடிக்கைகளை இந்த அமைப்பு முன்னெடுத்து சென் றுள்ளது. மேலும், பல தீவிர வாத இயக்கங்களுடன் இந்த அமைப்பினர் நெருங்கிய தொடர்பில் இருந்து வந் துள்ளனர்.

மேலும், 1989-ம் ஆண்டு நடந்த காஷ்மீர் பண்டிட்டுகளின் படுகொலை சம்பவத்தில் இந்த அமைப்பின் தலைவர் யாசின் மாலிக்குக்கு தொடர்பு உள் ளது. இவற்றின் அடிப்படை யில், சட்டவிரோத தடுப்புச் சட்டத்தின் கீழ், ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி அமைப்பை மத்திய அரசு தடை செய்துள்ளது. இவ்வாறு ராஜீவ் கெளபா தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி அமைப்பின் தலைவ ரான யாசின் மாலிக், தற்போது ஜம்முவில் உள்ள கோட் பல் வால் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். 1989-ம் ஆண்டு அப் போதைய உள்துறை அமைச்ச ராக இருந்த முப்தி முகமது சையதின் மகள் ரூபய்யா சையதை கடத்திய வழக்கில் அவர் கைது செய்யப் பட்டிருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in