

‘ஜிகாத் காதல்' என்ற பிரச்சினை மூலம் நாட்டைப் பிளவுபடுத்த பாஜக முயற்சிப்பதாக உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். மெயின்புரி செப்டம்பர் 13ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அகிலேஷ் யாதவ் பிரச்சாரத்தின் போது கூறியதாவது:
"பா.ஜ.க. மிகவும் தந்திர மான கட்சி. அவர்களை இந்த முறை மணிப்பூரி மக்கள் தோல்வி யடையச் செய்ய வேண்டும். முன்பு அவர்கள் 'நல்ல நாட்கள் வரும்' என்று கூறினார்கள். ஆனால் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதைக் கைவிட்டு தற்போது 'ஜிகாத் காதல்' பிரச்னையில் இறங்கியிருக்கிறார்கள். நரேந்திர மோடி அரசு தேர்தலின் போது கூறிய வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை. விவசாயிகளின் நலனுக்காகவும், மாநிலத்தில் நிலவும் மின்பற்றாக் குறையைச் சரிசெய்யவும் அவர்கள் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது.
நாம் தொடர்ந்து அவர்களிடம் நமக்கான நிலக்கரி ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டுகோள் விடுத்து வருகிறோம். ஆனால் அதற்குச் செவிசாய்க்க மறுக்கிறார் கள். இந்தத் தொகுதியில் 2012ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வெற்றிபெற்றது. அப்போது அது வழங்கிய அனைத்து வாக்குறுதி களையும் நிறைவேற்றியுள்ளது" என்றார்.