Last Updated : 09 Mar, 2019 05:01 PM

 

Published : 09 Mar 2019 05:01 PM
Last Updated : 09 Mar 2019 05:01 PM

மசூத் அசாரை விடுவித்தது யார் என மக்களுக்கு சொல்வீர்களா?- பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்வி

ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை இந்திய சிறையில் இருந்து விடுவித்தது யார் என்பதை இந்த தேசத்துக்கு செல்வீர்களா என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 1999-ம் ஆண்டு பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் இருந்தது. அப்போது, ஐசி-814 என்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் பயணிகளுடன் கடத்தப்பட்டது. அப்போது காந்தகாரில் தீவிரவாதிகள் இந்திய அரசிடம் பேச்சு நடத்தினார்கள். அந்த பேச்சுவார்ததையில் பயணிகளை பத்திரமாக விடுவிக்கும்  பொருட்டு இந்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த மசூத் அசாரை அப்போதைய பாஜக அரசு விடுவித்தது.

பாகிஸ்தான் சென்றபின் மசூத் அசாரை இதுவரை இந்திய அரசால் கைது செய்ய முடியவில்லை. இதைக் குறிப்பிட்டு ராகுல் காந்தி இன்று தனது தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார். கர்நாடக மாநிலம், ஹவேரியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று பங்கேற்று பேசியதாவது:

புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டார்கள். இந்த தாக்குதலுக்கு யார் காரணம் என்பதை பிரதமர் மோடி அறிந்திருப்பார். ஒரே ஒரு சிறிய கேள்வி கேட்கிறேன். சிஆர்பிஎப் வீரர்களை யார் கொலை செய்தது?,  அந்த தீவிரவாத அமைப்பின் தலைவர் பெயர் என்ன?.

மசூத் அசாரை இந்திய சிறையில் இருந்து யார் விடுவித்தார்கள் என்பதை பிரதமர் மோடி எனக்கு புரியவைத்தால் நன்றாக இருக்கும்.

இதைப் பற்றியெல்லாம் ஏன் பேச மறுக்கிறீர்கள் மோடி. சிஆர்பிஎப் வீரர்களை கொலை செய்த lதீவிரவாத அமைப்பின் தலைவர்  பாஜக மூலம்தான் பாகிஸ்தானுக்குள் சென்றார். மோடிஜி நாங்கள் உங்களை விரும்பவில்லை. தீவிரவாதத்துக்கு நாங்கள அடிபணியமாட்டோம். மசூத் அசாரை பாகிஸ்தானுக்கு யார் அனுப்பி வைத்தது என்பதை மக்களுக்கு மோடி தெளிவுபடுத்த வேண்டும்.

ஊழல் குறித்து பிரதமர் மோடி பேசுகிறார். ஆனால், அவர் ஊழல்வாதி என்பது தேசத்துக்கே தெரியும். மேக் இன் இந்தியா,  ஸ்டான்ட் அப் இந்தியா, ஸிட் டவுன் இந்தியா எனக் கூறி கடந்த 5 ஆண்டுகளாக பிரதமர் மோடி மக்களை ஏமாற்றி வருகிறார்.

வரும் மக்களவைத் தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளமும், காங்கிரஸ் கட்சியும் இணைந்து போட்டியிடும்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x