Published : 04 Sep 2014 09:30 AM
Last Updated : 04 Sep 2014 09:30 AM

கேரள ஆளுநராக பி.சதாசிவம் நியமனம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

கேரளா மாநில ஆளுநராக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி புதன்கிழமை பிறப்பித்தார். செப்டம்பர் 5-ம் தேதி சதாசிவம் கேரள ஆளுநராக பதவியேற்கிறார்.

தமிழகத்தைச் சேர்ந்த சதாசிவத்தின் வயது 65. ஆளுநராக பதவி ஏற்கும் முதல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எனும் சிறப்பை பெறுகிறார். மோடியின் ஆட்சியில் ஆளுநர் பதவி ஏற்கும் முதல் தமிழரும் இவர்தான்.

பலத்த எதிர்ப்புகளை மீறி மத்திய அரசு இந்த நியமனத்தை நடத்தி காட்டியுள்ளது. சதாசிவத்தை ஆளுநராக நியமிக்க உள்துறை அமைச்சகம் அனுப்பிய பரிந்துரையை நிராகரிக்கும்படி கேரள உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் 117 உறுப்பினர்கள் சேர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை தீர்மானம் நிறைவேற்றி இருந்தனர்.

ஏனெனில் இந்த முடிவு, நீதித்துறையின் சுதந்திரத்தை பாதிக்கும் எனவும் அவர்கள் காரணம் கூறி இருந்தனர்.

பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மீது முன்பு குஜராத்தில் பதிவான போலி என்கவுன்ட்டர் வழக்கில் அவரை விடுவித்ததற்கு கைமாறாகவே பாஜக அரசு சதாசிவத்துக்கு ஆளுநர் பதவி அளிப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x