Last Updated : 24 Feb, 2019 10:12 AM

 

Published : 24 Feb 2019 10:12 AM
Last Updated : 24 Feb 2019 10:12 AM

ஆர்.டி.ஐ. வரம்புக்குள் அரசியல் கட்சிகள்: ராகுல் காந்தி ஆதரவு

தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்குள்(ஆர்டிஐ) அரசியல் கட்சிகள், நீதிமன்றம், ஊடகங்கள் ஆகியவற்றைக் கொண்டுவருவதை வரவேற்பதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

 டெல்லியில் ஜேஎல்என் அரங்கில் கல்லூரி மாணவர்களுடன் நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உரையாடினார். அப்போது மாணவர்கள் அரசியல் கட்சிகளை ஆர்டிஐக்குள் கொண்டுவருவது குறித்துக் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:

வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கப்பட வேண்டும். 100 சதவீதம் உயர்த்தப் பட வேண்டும் என்பதை நான் ஆதரிக்கிறேன். அரசியல் கட்சிகளும் மக்களுக்கான அமைப்புதான். நீதிமன்றம், ஊடகங்கள், நிர்வாகம் அனைத்தும் மக்களுக்கானதுதான்.

 ஆதலால், அரசியல் கட்சிகளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்குள் கொண்டுவருவது நீங்கள் விரும்பினால், ஏன் நீதிமன்றம், ஊடகங்கள், அரசு நிர்வாகம், அதிகாரிகள்  அனைவரையும் கொண்டுவரக்கூடாது?. அனைவரிடமும் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

 அரசியல் கட்சிகளை மட்டும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கொண்டு வந்தால், அது அரசியல் கட்சிகளை அடிப்படை ரீதியில் பலவீனப்படுத்தும். நாட்டு மக்களையும் பலவீனப்படுத்தும். ஆதலால் அனைத்தையும் தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் கொண்டு வர வேண்டும்

நாட்டில் உள்ள முக்கிய 20 தொழிலதிபர்களையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்குள் ஏன் கொண்டுவரக்கூடாது? அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

 ஆனால், இப்போதுள்ள அரசு ஆர்டிஐ சட்டத்தை அழிக்க முயல்கிறது. ஆர்டிஐ சட்டம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கால் கொண்டுவரப்பட்டது.

ஊழலை எதிர்கொண்டு அழிக்க, லோக்பால் உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் இருக்கின்றன. ஆனால், அவை அனுமதிக்கப்படுவதில்லை.

நான் 100 சதவீதம் பேச்சு, கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறேன், நீங்கள் வன்முறையாக நடந்து கொள்ளத் தொடங்கும் போது நான் அதற்கு எல்லை வகுத்துவிடுவேன். மக்களை துன்புறுத்தும்போது, தாக்கும்போது, எரிச்சலூட்டும்போது அதற்கு எல்லை வகுப்படும். என்னைப் பொருத்தவரை கருத்து சுதந்திரம் என்பது, வார்த்தைகளில் பேசுவதற்கு மட்டுமே, நாகரீகமான முறையில் நடப்பதற்கு மட்டுமே. அதுதான் சரியானதாகும்.

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x