பாஜக எம்.பி கீர்த்தி ஆசாத் காங்கிரஸில் இணைந்தார்: அருண் ஜேட்லியை விமர்சித்ததால் சஸ்பெண்ட் ஆனவர்

பாஜக எம்.பி கீர்த்தி ஆசாத் காங்கிரஸில் இணைந்தார்: அருண் ஜேட்லியை விமர்சித்ததால் சஸ்பெண்ட் ஆனவர்
Updated on
1 min read

பாஜக மூத்த தலைவரும், எம்.பி.யுமான கீர்த்தி ஆசாத் அக்கட்சியில் இருந்து விலகி, ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணைந்துள்ளார்.

டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மீது 2015-ம் ஆண்டு பாஜக எம்பி கீர்த்தி ஆசாத் பரபரப்பு குற்றச்சாட்டுக்களை சுமத்தினார். இதையடுத்து, கட்சியில் இருந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். தர்பங்கா தொகுதி எம்.பி.யான அவர் அதிருப்தியுடன் இருந்து வந்தார்.

கட்சி தாவினால் பதவி பறிக்கப்பபடும் என்பதால் மற்ற கட்சிகளில் சேரவில்லை. அதுபோலவே பாஜக நடவடிக்கைகளிலும் அவர் ஒதுங்கியே இருந்து வந்தார். பாஜக சார்பில் மூன்று முறை எம்.பி.யான கீர்த்தி ஆசாத், சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து அக்கட்சியில் இணைந்துள்ளார். கடந்த 15-ம் தேதியே காங்கிரஸில் இணைந்துள்ளார்.

எனினும் புல்வாமா தாக்குதல் காரணமாக வீர மரணமடைந்த வீரர்களுக்கு நாடுமுழுவதும் அஞ்சலி நடந்து வந்ததால் தாமதமாக இதனை அறிவிப்பதாக கீர்த்தி ஆசாத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணைந்த புகைப்படத்தையும் அவர் இணைத்துள்ளார்.  

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in