

இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் செல் லும் விமானத்தை கடத்தப் போவதாக ஏர் இந்தியா கட்டுப்பாட்டு அறை தொலை பேசிக்கு நேற்று மிரட்டல் அழைப்பு வந்தது.
இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளன.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா வில் கடந்த 14-ம் தேதி நிகழ்த்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத் தின் தொடர்ச்சியாக, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் பாதுகாப்பு தீவிரப் படுத்தப்பட்டன.
இந்தச் சூழ்நிலையில், மும்பையில் உள்ள ஏர்-இந்தியா விமானக் கட்டுப் பாட்டு அறைக்கு நேற்று ஒரு தொலை பேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்மநபர், இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் செல்லும் ஒரு விமானத்தை கடத்தப்போவதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து மத்திய அரசுக்கு ஏர்-இந்தியா நிறுவனம் தகவல் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து, மத்திய அரசின் உத்தரவின்பேரில், நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தீவிர சோதனை
இதன் ஒருபகுதியாக, அனைத்து விமான நிலையங்களிலும் பல அடுக்கு சோதனைகளுக்குப் பின்னரே, விமானங்களுக்குள் பயணிகள் அனு மதிக்கப்படுகின்றனர். மேலும், ஒவ் வொரு விமான நிலையத்திலும் கூடுத லான எண்ணிக்கையில் சிஐஎஸ்எப் வீரர்களும் வெடிகுண்டு சோதனை நிபுணர்களும் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், சந்தேகத்துக்கு இடமாக நடந்துகொள்ளும் பயணிகளை அடை யாளம் கண்டு சோதனை செய்ய சிறப்பு படையினரையும் சிஐஎஸ்எப் நியமித்துள்ளது. இவர்கள், சாதாரண உடைகளில் பயணிகளுடன் பயணி களாகக் கலந்து அவர்களை கண் காணிப்பர்.
இதுதவிர, விமான நிலையங்களுக்கு வரும் கார்கள் உட்பட அனைத்து வாகனங்களும் 3 அடுக்கு சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவதாக விமான பாதுகாப்பு அமைப்பு (பிசிஏஎஸ்) தெரிவித்துள்ளது.