

தேர்தல் சமயத்தில் அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை ஈர்க்க தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனங்கள் புதிய நிகழ்ச்சிகளை வழங்கி வருகின்றன.
வழக்கமான விளம்பரச் சந்தை சற்று மந்தமாக உள்ள நிலையில், தேர்தல் விளம்பரங்கள் பெரிய வரப்பிரசாதமாக உள்ளன என தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
ஹெட்லைன்ஸ் டுடே, கரன் தாப்பரை வைத்து டு த பாயின்ட் என்ற நிகழ்ச்சியையும், ஐ டிவி நெட்வொர்க், மூத்த செய்தியாளர் வீர் சங்வியை வைத்து மாண்டேட் வித் டெஸ்னி, ஐபிஎன்7 வினோத் துவாவை வைத்து வினோத் துவா கா பிரஷ்னக்கால் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. இன்னும் வெவ்வேறு நிகழ்ச்சிகளுடன் பிரபல தொலைக்காட்சிகள் முதல் சாதாரண தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனங்கள் வரை இப்போட்டியில் களமிறங்கியுள்ளன.
தேர்தல் சமயத்தில் அரசியல் கட்சிகள், அச்சு, எலக்ட்ரானிக் ஊடகங்கள், பொதுவெளி விளம்பரங்கள் என விளம்பரத்துக்காக குறிப்பிட்ட அளவு தொகையை ஒதுக்கி யிருக்கும். அவற்றிலிருந்து தங்களுக்கான வருவாயை அதிக அளவு பெறுவதற்காக தொலைக் காட்சி ஊடகங்கள் பிரத்யேக நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றன.
இந்த தேர்தல் நேரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாயை தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனங்கள் விளம்பர வருவாயாக பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.