Last Updated : 18 Sep, 2014 04:04 PM

 

Published : 18 Sep 2014 04:04 PM
Last Updated : 18 Sep 2014 04:04 PM

எல்லைப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு: பிரதமர் மோடியிடம் சீன அதிபர் ஜி ஜின்பிங் உறுதி

எல்லைப் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காணப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் சீன அதிபர் ஜி ஜின்பிங் உறுதி அளித்துள்ளார்.

டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இரு தலைவர்களும் நேற்று பேச்சு வார்த்தை நடத்தினர். சுமார் 90 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்புக்குப் பிறகு அவர்கள் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர்.

மோடி ஆட்சேபம்

அப்போது பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:

இந்தியாவின் மிகப்பெரிய அண்டை நாடு சீனா. அந்த நாட்டுடனான உறவுக்கு இந்தியா முன்னுரிமை அளிக்கிறது. இரு நாடுகளிடையே அமைதி நிலவ எல்லைக் கட்டுப்பாட்டு கோடு வரையறை மிகவும் முக்கியமானது. இப்பணி பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. எல்லை வரையறையை தொடங்க இது சரியான நேரம்.

காஷ்மீரில் சீன படைகள் எல்லை தாண்டியுள்ளன. இதுகுறித்து எனது ஆட்சேபத்தை சீனாவிடம் தெரிவித்துள்ளேன். எல்லையில் அமைதியும் ஸ்திரதன்மையும் நிலவினால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியப்படும். சீனாவின் வளர்ச்சியில் இந்தியாவும், இந்தி யாவின் வளர்ச்சியில் சீனாவும் பங்களிக்க முடியும் சில மாநிலங் களைச் சேர்ந்தவர்களுக்கு தனித் தாளில் சீனா விசா வழங்கி வருவது குறித்தும் இந்தியா வின் கவலையை எடுத்துரைத் துள்ளேன். இந்தப் பிரச்சினைக்கும் விரைந்து தீர்வு காண வேண்டும்.

இந்திய, சீன வர்த்தக உறவில் சமநிலையற்றதன்மை நிலவுவதால் இந்திய நிறுவனங்களுக்கு சீன சந்தையில் திறந்த வாசலை ஏற்படுத்தித் தர வேண்டும்.

கைலாஷ் மானோசரோவர் புனித தலத்துக்கு செல்ல நது லா வழியை திறந்ததற்காக இந்தியாவின் சார்பில் சீன அதி பருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று மோடி கூறினார்.

சீன அதிபர் உறுதிமொழி

அதிபர் ஜி ஜின்பிங் கூறியதாவது:

இந்திய- சீன எல்லைப் பிரச் சினை மிக நீண்டகாலமாக நீடிக் கிறது. தெளிவற்ற எல்லை வரை யறையால் சில நேரங்களில் பிரச் சினைகள் எழுகின்றன. எல்லைப் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண சீனா உறுதி பூண்டுள்ளது.

பதற்றமான சூழ்நிலைகள் எழும்போது அதனை ராஜ்ஜிய ரீதியில் சமாளிக்கும் திறன் இருநாடு களுக்கும் உள்ளது. பதற்றத்தை தணிக்கும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். வர்த்தக சமநிலையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

பிரதமர் நரேந்திர மோடி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பெய்ஜிங் வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளேன். சீனாவில் வரும் 2015-ம் ஆண்டு இந்திய வருகை ஆண்டாக கொண்டாடப்படும். அதேபோல் இந்தியாவில் 2016-ம் ஆண்டு சீன வருகை ஆண்டாக கொண்டாடப்படும்.

சீனாவின் சார்பில் குஜராத், மகாராஷ்டிரத்தில் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும். இந்தியாவும் சீனாவும் இரட்டை இன்ஜின்களாக செயல்பட்டு இந்த பிராந்தியத்தின் வளர்ச்சிக்கும் செழுமைக்கும் வழிவகுக்க வேண் டும். இருநாடுகளும் இணைந்து குரல் கொடுத்தால் உலகமே கவனிக்கும். இவ்வாறு ஜி ஜின்பிங் தெரிவித்தார்.

சென்னை-பெங்களூர்-மைசூர் அதிவேக ரயில் திட்டம்

இரு தலைவர்களின் பேச்சு வார்த்தையின்போது அடுத்த 5 ஆண்டுகளில் சீனாவின் சார்பில் இந்தியாவில் ரூ.1,20,000 கோடி முதலீடு செய்யப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.

அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் சென்றிருந்தபோது அந்த நாடு சார்பில் இந்தியாவில் ஐந்து ஆண்டுகளில் ரூ.2,10,000 கோடி முதலீடு செய்ய உறுதி அளிக்கப்பட்டது நினைவுகூரத் தக்கது. மேலும் வர்த்தக மேம் பாடு உட்பட இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில் சென்னை-பெங்களூர்-மைசூர் அதிவேக ரயில் திட்ட ஒப்பந்தமும் ஒன்றாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x