Last Updated : 18 Feb, 2019 04:16 PM

 

Published : 18 Feb 2019 04:16 PM
Last Updated : 18 Feb 2019 04:16 PM

16 கோடி பேர் மது அருந்துபவர்கள்: இந்திய அளவில் ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்

இந்தியாவில் 14.6 சதவீதம் அதாவது 16 கோடி பேர் 10 முதல் 75 வயது வரையிலானவர்கள் மது அருந்துவதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. இதில் அதிகப்பட்ச அளவில் மது அருந்துவோர் சத்தீஸ்கர், திரிபுரா, பஞ்சாப், அருணாச்சல பிரதேசம் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சமூக நீதி மற்றும் எரிசக்தித்துறை அமைச்சகமும் எய்ம்ஸ் மருத்துவமனையும் இணைந்து மது மற்றும் போதை வஸ்துக்களை நாடுவோர் குறித்த ஓர் ஆய்வை இந்தியா முழுமைக்கும் நடத்தியது.

'இந்தியாவில் பொருள் பயன்பாடுகளும் அதன் பாதிப்புகளும்' என்ற தலைப்பில் இந்தியாவில் உள்ள 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் இதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆய்வு விவரம் வருமாறு:

மதுவை நாடுபவர்களில், 38 பேருக்கு ஒருவர் மது பாதிப்பு தொடர்பாக வெவ்வேறு சிகிச்சைகளை நாடிச் செல்வதாகவும் 180 பேருக்கு ஒருவர் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்றுவருபவர்களாகவும் உள்ளனர்.

நாட்டில் 16 கோடி பேர் மது அருந்துபவர்களாக இருக்கிறார்கள்.

இதில் அதிகப்பட்ச அளவில் மது அருந்துவோர் உள்ள மாநிலங்களாக சத்தீஸ்கர், திரிபுரா, பஞ்சாப், அருணாச்சல பிரதேசம் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நாட்டில், மதுவுக்கு அடுத்தபடியாக, கஞ்சா மற்றும் ஓப்பியம் ஆகியவை பொதுவாக பயன்படுத்தப்படுகிறது என்று கூறப்படுகிறது.

இந்த ஆய்வுக்காக தேசிய அளவில் 186 மாவட்டங்களில் 2,00,111 குடும்பங்களில் பார்வையிடப்பட்டது. மொத்தம் 4,73,569 பேரிடம் நேர்காணல் செய்யப்பட்டது.

இந்த ஆய்வின்போது, கடந்த 12 மாதங்களில் 2.8 சதவீத 3.1 கோடி இந்தியர்கள் கஞ்சா பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

தேசிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் 1.14 சதவீதம் பேர் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 0.96 சதவீதம் பேர் ஓபியாட் எனப்படும் ரசாயன போதை மருந்து மாத்திரை வடிவத்திலும் 0.52 சதவீதம் பேர் கசகசா எனும் தாவரத்திலிருந்து பெறப்பட்ட நேரடி ஓப்பியத்தையும் பயன்படுத்துகின்றனர்.

இந்தியாவில் 10-75 வயதுக்குள் 1.08 சதவீதம் பேர் அதாவது 1.18 கோடி பேர் மருத்துவம் அல்லாத மருத்துவ அறிவுரைகள் ஏதும் அல்லாத நிலையிலேயே மனதை ஆழ்நிலை உறக்கத்தில் வைத்திருக்கவும் உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்கக் கூடியதுமான இப்போதை மருந்து எடுத்துக்கொள்பவர்களாக இருக்கிறார்கள்.

4.6 லட்சம் குழந்தைகளும் 18 லட்சம் வயது வந்தவர்களும் இன்ஹேலர் தேவைப்படுபவர்களாக உள்ளதும் இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x