

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில், 40 வீரர்கள் வீரமரணம் அடைந்த சம்பவம் தொடர்பாக, சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பும் வகையில் புகைப்படம் வெளியிட்ட மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு இருதினங்களுக்கு முன்பு துணை ராணுவப்படையினர் 2,500 பேர் 90க்கும் மேற்பட்ட பேருந்தில் சென்றனர். புல்வாமா மாவட்டம் அவந்திபோரா நெடுஞ்சாலையில் பேருந்து வந்த போது 5-வது வரிசையில் சென்றுகொண்டிருந்த பேருந்து மீது 150 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து பொருட்கள் நிரப்பப்பட்ட காரை மோதச் செய்து ஜெய்ஷ்- இ- முகமது அமைப்பின் தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினார்.
இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விவகாரத்தால் நாடுமுழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் புல்வாமா தாக்குதல் தீவிரவாதிக்கு ஆதரவாகவும், வீரர்களை கிண்டல் செய்தும் சில இளைஞர்கள் சமூகவலைதளங்களில் தகவல்களை பகிர்ந்து வருவதாக தகவல் வெளியானது.
அந்தவகையில், ராஜஸ்தானில் உள்ள நிம்ஸ் பல்கலையில் பிஎஸ்சி 2வது ஆண்டு படிக்கும் தல்வீன் மன்சூர், ஜோகிரா நசீர், உஸ்மா நசீர், இக்ரா ஆகியோர் வீர்களை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
புல்வாமாவில் நடந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்ததை கொண்டாடும் வகையில், தேசவிரோதமான புகைப்படங்களை பதிவிட்டதாகவும், இதனால், மாணவர்கள் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது