

விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மகாராஷ்டிரா விவசாயிகள் நேற்று நாசிக்கில் இருந்து மும்பை நோக்கி பிரம்மாண்ட பேரணியை தொடங் கினர்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் இதே கோரிக்கையை வலியுறுத்தி மகாராஷ்டிர விவசாயிகள் மும்பை நோக்கி பேரணி நடத்தினர். அப் போது ரூ.34,000 கோடி மதிப்பி லான விவசாய கடன்கள் தள்ளு படி செய்யப்படும் என்று முதல் வர் தேவேந்திர பட்னாவிஸ் தலை மையிலான பாஜக அரசு அறிவித்தது.
ஆனால் ரூ.17,000 கோடி மதிப் பிலான கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. பல் வேறு வாக்குறுதிகளை மாநில அரசு நிறைவேற்றவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டியுள் ளனர்.
வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி அகில இந்திய கிசான் சபா சார்பில் நாசிக்கில் இருந்து மும்பை நோக்கி நேற்று பிரம்மாண்ட பேரணி தொடங்கியது. இதில் 50 ஆயிரம் பேர் பங்கேற்று பேரணியாக சென்றனர். இந்த பேரணி வரும் மார்ச் 2-ம் தேதி மும்பையை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மேலும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியில் இணை வார்கள் என்று அகில இந்திய கிசான் சபா தெரிவித்துள்ளது.