

வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்பதிலும், மீட்கப்பட்ட மக்களுக்கு நிவாரண முகாம் வசதிகள் மற்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
அதேவேளையில், மீட்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் தேவையான மருத்துவ சேவைகள் கிடைக்கப்பெறுவதை, அம்மாநில சுகாதார செயலருடன் ஆலோசித்து உறுதி செய்யுமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் 250-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.