

ஒடிசா மாநிலம் காலாஹண்டியிலுள்ள பவானிபட்னா நகரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:
தீவிரவாதிகளுக்கு எதிரான போராட்டம் என்பது ஒரு தனி நபரின் போராட்டமோ அல்லது கட்சியின் போராட்டமோ இல்லை. ஒட்டுமொத்த நாட்டின் போராட்டமாகும் இது.
அண்டை நாடுகளை திருப்தி படுத்த முந்தைய காங்கிரஸ் அரசு கடைப்பிடித்த கொள்கைகளால், நமது நாட்டின் பாதுகாப்புடன் யார் வேண்டுமானாலும் விளை யாடலாம் என்ற அவல நிலை உள்ளது. காங்கிரஸ் அரசு கடை பிடித்த இந்த கொள்கைகளால் நாட்டில் தீவிரவாதம் அதிகமாக வளர்ந்துவிட்டது. இந்த கொள்கை கள் தொடரும்பட்சத்தில் நாடு இந்த பிரச்சினையிலிருந்து மீள முடியாது.
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா வில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தக்க பதிலடியைக் கொடுக்கும்.
குறிப்பிட்ட சாதி, மதம், இனத்தைப் பார்த்து மோடி தலைமையிலான அரசு பணியாற்ற வில்லை. நாட்டின் ஒட்டுமொத்த கிராமம், ஏழைகள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் என அனைத்து சமுதாய மக்களுக் காகவும் பாகுபாடின்றி பிரதமர் மோடி தலைமையிலான அரசு செயலாற்றி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.