Last Updated : 15 Feb, 2019 11:13 AM

 

Published : 15 Feb 2019 11:13 AM
Last Updated : 15 Feb 2019 11:13 AM

புல்வாமா தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது: சோனியா கண்டனம்

புல்வாமாவில் தீவிரவாதிகளின் தற்கொலைத் தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது மற்றும் கோழைத்தனமானது என்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நேற்று மாலை நடந்த தற்கொலைத் தாக்குதலில் 45 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப்படை தீவிரவாதி ராணுவத்தினர் சென்ற பேருந்துமீது 350 கிலோ வெடிபொருட்களுடன் காரை மோதி வெடிக்கச் செய்தார்.

இச்சம்பவம் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்ததாவது:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் உள்ள சி.ஆர்.பீ.எஃப் கட்டுப்பாட்டுப் பகுதியில் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன், ஆத்திரமடைந்தேன், ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன், நமது துணிச்சலான சி.ஆர்.பி.எஃப் அதிகாரிகள் தங்கள் இன்னுயிரை தந்து கோழைத்தனமான பயங்கரவாதிகளிடமிருந்து தேசத்தைக் காத்துள்ளனர். அவர்களின் தியாகம் மறக்கப்படாது.

உயிரிழந்த ஒவ்வொரு வீரருக்கும் எனது பிரியமும் அன்பும் உரித்தாகட்டும். அவர்கள் ஒவ்வொருவரின் துயரத்தையும் வலியையும் என் இதயத்தோடு பகிர்ந்துகொள்கிறேன். இந்த பயங்கரமான செயல் ஒவ்வொரு மனித உரிமை மீறலுக்கும் எதிரானது. இந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பாளிகள் நீதியின்முன் நிறுத்தப்படுவார்கள்.

இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

குலாம் நபி ஆஸாத்

மூத்த காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான குலாம் நபி ஆஸாத் தனது கண்டன அறிக்கையில், ‘‘ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் மீண்டும் தனது கோரமுகத்தைக் காட்டியுள்ளது மிகவும் துரதிஷ்டவசமானது’’ என்று கூறியுள்ளார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x