ரபேல் விமான பேச்சுவார்த்தைகள் பற்றிய பிரதமர் அலுவலகத்தின் அவ்வபோதைய விசாரிப்புகள் தலையீடாகுமா? - நிர்மலா சீதாராமன்

ரபேல் விமான பேச்சுவார்த்தைகள் பற்றிய பிரதமர் அலுவலகத்தின் அவ்வபோதைய விசாரிப்புகள் தலையீடாகுமா? - நிர்மலா சீதாராமன்
Updated on
1 min read

ரஃபேல் போர் விமான ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் இந்திய பேச்சுவார்த்தைக் குழுவின் நிலைப்பாடுகளை வலுவற்றுப் போகும் விதமாக பிரதமர் அலுவலகம் இணைப்பேச்சு வார்த்தைகளை நடத்தியதன் முழு விவரம் தி இந்து ஆங்கிலம் நாளிதழில் என்.ராமின் கட்டுரையாக வெளிவந்ததையடுத்து நிர்மலா சீதாராமன் அந்தக் கட்டுரையின் வாதங்களை ஏற்க மறுத்துள்ளார்.

தி இந்து ஆங்கிலம் ரிப்போர்ட்டை அடுத்து மக்களவையில் காங்கிரஸும் பிற கட்சிகளும் ஆர்பாட்டத்தில் ஈடுபட நிர்மலா சீதாராமன் தானே கவனமேற்கொண்டு கூறிய போது, “இவர்கள் செத்தக் குதிரையைப் போட்டு அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளைப் பற்றிய அவ்வப்போதைய விசாரிப்புகளை பிரதம அலுவலகத்தின் தலையீடு என்று விளக்கமளிக்கப்படலாகாது” என்றார்.

மேலும் எதிர்க்கட்சியினர் பன்னாட்டு நிறுவனங்களின் சுயநலன்களின் கையில் விழுகின்றனர், இந்திய விமானப்படையின் நலன்களில் அக்கறையில்லை என்று சாடினார் நிர்மலா சீதாராமன். பிரான்ஸ் நிறுவனத்துடன் பிரதமர் அலுவலகம் பேச்சுவார்த்தைகள் நடத்தியதாக அப்போதைய பாதுகாப்புச் செயலர் ஆட்சேபணை தெரிவித்தார் என்ற தி இந்து செய்தி அறிக்கையைக் குறிப்பிட்டு பேசிய நிர்மலா சீதாராமன்,  அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் கடிதத்துக்கு பதில் அளிக்கையில் அந்த அதிகாரியை நோக்கி அனைத்தும் நன்றாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது நீங்கள் அமைதி காக்கவும் என்று கூறினார் என்றார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தேசிய ஆலோசனைக் குழுவின் சேர்பர்சனாக இருந்த சோனியா காந்தி பிரதமர் அலுவலகதை நடத்தவில்லையா? அது தலையீடு ஆகாதா? என்றும் கேள்வி எழுப்பினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in