

ஜம்மு - காஷ்மீரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாம்களை சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் இன்று ஆய்வு செய்கிறார்.
இன்று ஜம்மு செல்லும் அவர், அங்குள்ள மருத்துவ முகாம்களில் ஆய்வு மேற்கொள்கிறார். நாளை அவர் ஸ்ரீநகர் செல்கிறார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள காஷ்மீருக்கு 100 டன் மருந்துகளையும், மற்ற அத்தியாவசியப் பொருட்களையும், மருத்துவ குழுவையும் மத்திய சுகாதார அமைச்சகம் ஏற்கெனவே அனுப்பி வைத்திருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.