Published : 16 Feb 2019 02:05 PM
Last Updated : 16 Feb 2019 02:05 PM

தீவிரவாதத் தாக்குதலில் அதிக வீரர்களைப் பலி கொடுத்த மாநிலம்

தீவிரவாதத் தாக்குதலில் உத்தரப் பிரதேச மாநிலம் அதிக வீரர்களைப் பலிகொடுத்து சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

 

சிஆர்பிஎப் வீரர்கள் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்குச் சென்று கொண்டிருக்கும்போது அவந்திபோரா நெடுஞ்சாலையில் தீவிரவாதத் தாக்குதல்  நடத்தப்பட்டது. இதில்  45 வீரர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

ஜம்மு பிரிவு

1. நசீர் அஹ்மத் (ஜம்மு காஷ்மீர்)

2. ஜெய்மல் சிங் (பஞ்சாப்)

3. சுக்ஜிந்தர் சிங் (பஞ்சாப்)

4. திலக் ராஜ் (இமாச்சலப் பிரதேசம்)

5. ரோஹித்தாஷ் லம்பா (ராஜஸ்தான்)

 

ஸ்ரீநகர் பிரிவு

6. விஜய் சோரங் (ஜார்க்கண்ட்)

7. வசந்த குமார் வி.வி. (கேரளா)

8. சுப்ரமணியம் ஜி (தமிழ்நாடு)

9. மனோஜா குமார் பெஹரா (ஒடிசா)

10. ஜி.டி குரு (கர்நாடகா)

11. நாராயண் லால் குர்ஜார் (ராஜஸ்தான்)

12. மகேஷ் குமார் (உத்திரப் பிரதேசம்)

13. பிரதீப் குமார் (உத்தர பிரதேசம்)

14. ஹேம்ராஜ் மீனா (ராஜஸ்தான்)

15. பி.கே சாஹூ (ஒடிஷா)

16. ரமேஷ் யாதவ் (உத்தரப் பிரதேசம்)

17. சஞ்சய் ராஜ்புத் (மகாராஷ்டிரா)

18. கெளஷல் குமார் ராவத் (உத்தரப் பிரதேசம்)

19. பிரதீப் சிங் (உத்தரப் பிரதேசம்)

20. ஷ்யாம் பாபு (உத்தரப் பிரதேசம்)

21. அஜித் குமார் ஆசாத் (உத்தரப் பிரதேசம்)

22. மனீந்தர் சிங் அட்ரி (பஞ்சாப்)

23. பாபுலு சாந்த்ரா (மேற்கு வங்கம்)

24. அஸ்வினி குமார் கவுச்சி (மத்தியப் பிரதேசம்)

25. ரத்தோட் நிதின் சிவாஜி (மகாராஷ்டிரா)

26. பகீரதி சிங் (ராஜஸ்தான்)

27. வீரேந்திர சிங் (உத்தராகண்ட்)

28. அவதேஷ் குமார் யாதவ் (உத்தரப் பிரதேசம்)

29. ரத்தன் குமார் தாகூர் (பிஹார்)

30. கங்கஜ் குமார் திரிபாதி (உத்தரப் பிரதேசம்)

31. ஜீத் ராம் (ராஜஸ்தான்)

32. அமித் குமார் (உத்தரப் பிரதேசம்)

33. விஜய் முர்யா (உத்தரப் பிரதேசம்)

34. குல்விந்தர் சிங் (பஞ்சாப்)

35. மானேஸ்வர் பிசுமாதிரி (அசாம்)

36. மோகன் லால் (உத்தராகண்ட்)

37. சஞ்சய் குமார் சின்ஹா ​​(பிஹார்)

38. ராம் வகீல் (உத்தரப் பிரதேசம்)

39. சி. சிவசந்திரன் (தமிழ்நாடு)

 

அதில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து அதிக வீரர்கள் பலியாகியுள்ளனர். மகேஷ் குமார், பிரதீப் குமார், ரமேஷ் யாதவ், கெளஷல் குமார் ராவத், பிரதீப் சிங், ஷ்யாம் பாபு, அஜித் குமார் ஆசாத், அவதேஷ் குமார் யாதவ், கங்கஜ் குமார் திரிபாதி, அமித் குமார், விஜய் முர்யா மற்றும் ராம் வகீல் ஆகிய 12 பேர் உ.பி.யைச் சேர்ந்தவர்கள்.

 

அடுத்ததாக பஞ்சாப் மாநிலத்தில் இருந்து 4 வீரர்கள் பலியாகியுள்ளனர்.  குல்விந்தர் சிங்,  மனீந்தர் சிங் அட்ரி, சுக்ஜிந்தர் சிங் மற்றும் ஜெய்மல் சிங் ஆகியோர் ஆவர்.

 

இதற்கிடையே தமிழகம் 2 வீரர்களைப் பலிகொடுத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், சவலப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கணபதி என்பவரின் மகன் ஜி. சுப்பிரமணியன் மற்றும் அரியலூர் மாவட்டம், கார்குடியைச் சேர்ந்த சின்னையன் என்பவரின் மகன் சி. சிவசந்திரன் ஆகிய இரண்டு வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

 

இந்நிலையில் தமிழக வீரர்கள் சுப்பிரமணியன் மற்றும் சிவசந்திரன் ஆகியோரின் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில்  தலா ரூ.20 லட்சமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x