

ஒரு ரூபாய் தாள்களை அச்சடிக்க மத்திய அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்று சட்ட அமைச்சகம் கூறியதையடுத்து மீண்டும் ஒரு ரூபாய் தாள்கள் புழக்கத்தில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.2 முதல் ரூ.10,000 வரையிலான பணம் எந்த வடிவத்தில் வரவேண்டும் என்பதை தீர்மானிக்கும்ம் அதிகாரம் மத்திய ரிசர்வ் வங்கியின் உள்ளது. ஆனால் ரூ.1 தாள்கள் மட்டுமல்ல நாணய வடிவத்தில் ரூ.1000 வரை மத்திய அரசு கொண்டு வர அதிகாரமுள்ளது.
ஆனால் நாணயச் சட்டத்தின் 2ஆம் பிரிவு நீக்கப்பட்ட பிறகு ரூ.1 தாள்களை அச்சடிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு இல்லை என்று மத்திய ரிசர்வ் வங்கி கருதுகிறது.
இதற்கு பதிலாக சட்ட அமைச்சகம் என்ன கூறியுள்ளது எனில், 2011 நாணயமாக்கச் சட்டம் மத்திய அரசு ரூ.1 தாள்களை அச்சிடத் தடையில்லை என்று கூறுவதாக தெரிவித்துள்ளது.
2011 நாணயமாக்கச் சட்டத்தின் பிரிவு 4, மத்திய அரசு ரூ.1000 வரையிலும் நாணயமாக வெளியிட அதிகாரம் படைத்தது என்றும், நாணயம் பற்றிய அந்தச் சட்ட விளக்கத்தின் படி மத்திய அரசு ரூ.1 தாள்களை அச்சடிக்கலாம் என்றே உறுதியாகக் கூறுகிறது.
இந்தச் சட்டத்தில் ரூபாய், தாள்கள் அல்லது நாணயங்கள் என்று எந்த வடிவத்திலும் இருக்கலாம் என்றே இந்தச் சட்டம் கூறுகிறது.
1940ஆம் ஆண்டு நாணயச் சட்டம் ரத்து செய்யப்பட்டதையடுத்து நாணயச் சட்ட 2011 உருவாக்கப்படும் போதே நாணயம் என்ற பிரிவில் ரூ.1 தாள்களையும் உள்ளடக்குமாறு சட்டப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மத்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934-ன் படி ரூ.1 தாள்களை அச்சடிக்க மத்திய ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் கிடையாது என்று கூறியுள்ளது சட்ட அமைச்சகம்.
நாணயத்தைத் தயாரிக்க ஆகும் செலவுகளை விட தாள்களுக்கு ஆகும் செலவு மிகக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.