Published : 19 Feb 2019 05:46 PM
Last Updated : 19 Feb 2019 05:46 PM

மக்களவைத் தேர்தல்களில் வெற்றி பெற புல்வாமா உளவுத்தகவலை புறக்கணித்தனர்: பாஜக மீது சமாஜ்வாதியின் அபு ஆஸ்மி சர்ச்சைத் தாக்கு

புல்வாமா தாக்குதல் குறித்து சமாஜ்வாதிக் கட்சியின் அபு ஆஸ்மி சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார். அதாவது இந்தக் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் அரசியல் சதி இருக்கிறது என்று அவர் அதிரடி சர்ச்சைக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

 

அதாவது, மக்களவைத் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு உளவுத்துறை தகவலைப் புறக்கணித்தது என்ற பயங்கரமான குற்றச்சாட்டை ஒன்றை முன் வைத்துள்ளார்.

 

மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியில் கூறும்போது  “இந்த அரசு தேர்தல்களில் வெற்றி பெற எதை வேண்டுமானாலும் செய்யும்” என்ற வரியை தனக்கு நினைவுபடுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

 

நாடு முழுதும் கொந்தளிப்புகளையும் பதற்றமான விளைவுகளையும் ஏற்படுத்திய புல்வாமா தாக்குதலையடுத்து காஷ்மீரிகள் மீது வன்முறை ஆங்காங்கே நிகழ்த்தப்பட்டு வருகிறது.

 

பல இடங்களில் சமூக ஆர்வலர்கள் காஷ்மீரிகளுக்குப் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இந்நிலையில் அபு ஆஸ்மி கருத்து சர்ச்சையாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x