சினிமா டயலாக் பேசி ரிலாக்ஸ் ஆக்கிய பியூஷ் கோயல்: பட்ஜெட் தாக்கலில் ருசிகரம்

சினிமா டயலாக் பேசி ரிலாக்ஸ் ஆக்கிய பியூஷ் கோயல்: பட்ஜெட் தாக்கலில் ருசிகரம்
Updated on
1 min read

மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயல் இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் செய்தபோது,  இடையே ''யூரி தி சர்ஜிகல் ஸ்டிரைக்'' திரைப்பட வசனத்தைப் பேசி கலகலப்பாக்கினார்.

2019-20-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயல் மக்களவையில் தாக்கல் செய்தார்.

அப்போது பட்ஜெட் தாக்கல் இடையே தான் பார்த்த ''யூரி தி சர்ஜிகல் ஸ்டிரைக்'' திரைப்படம் பற்றி பேசினார். இப்படம் 2016 காஷ்மீர் எல்லையில் ஊடுருவிய பயங்கரவாதிகள் மீது ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலின் வெற்றியைப் பேசுகிறது.

"யூரி திரைப்படம் பார்க்க நன்றாக இருந்தது, அதில் நிறைய ஜோஷ் இருந்தது’’ என்றார். இது சட்டஅமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட பல உறுப்பினர்களையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. அப்போது சட்ட அமைச்சர் குறுக்கிட்டு இப்படத்தில் இடம்பெறும் ''ஹவ் இஸ் தி ஜோஷ்'' என்ற முக்கிய வசனத்தை அவர் பேசினார்.

பாஜக நிர்வாகிகளும் தலைவர்களும் அமைச்சர்களும் ’யூரி’ திரைப்படத்தை பார்த்துள்ளனர். சமீப நாட்களாக பிரதமர் நரேந்திர மோடியும் தனது பொதுக்கூட்ட மேடைகளில் இப்படத்தின் வசனங்களை மேற்கோள் காட்டி வருகிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in