Published : 06 Feb 2019 11:54 AM
Last Updated : 06 Feb 2019 11:54 AM

சபரிமலை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது

சபரிமலை ஐயபப்ன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை தொடங்கியுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுப்பெண்களும் செல்லாம் என்று உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்கு எதிராகக் கடந்த இரு மாதங்களாக கேரளாவில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன.

கோழிக்கோடு கோயிலாண்டி பகுதியைச் சேர்ந்த பிந்து, மலப்புரம் அங்காடிபுரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகிய இரு பெண்கள் சபரிமலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சில காலம் போலீஸ் பாதுகாப்பில் இருந்துவிட்டு வீடு திரும்பிய கனகதுர்கா அவரது மாமியாரால் தாக்கப்பட்டதாகப் புகார் கூறினார். பின்னர் தனக்கு பாதுகாப்பு கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்த இளம் பெண்கள் இந்து, கனகதுர்காவுக்கு 24 மணி நேரமும் கேரள அரசு பாதுகாப்பு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனால் சபரிமலை விவகாரத்தால் கேரளாவில் மோதல்கள் நடந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிராகத் தேசிய ஐயப்ப பக்தர்கள் அமைப்பு(என்ஏடிஏ) சார்பில் அதன் தலைவர் ஷைலஜா விஜயன்  உள்ளிட்டோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுதாக்கல் செய்யப்பட்டது. .

இந்த மனுவை விசாரணை செய்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு ஜனவரி 22-ம் தேதி சீராய்வு மனு மீதான விசாரணை நடக்கும் என்று தெரிவித்தது. ஆனால் வழக்க விசாரிக்கும் அமர்வில் இடம் பெற்றிருந்த நீதிபதி இந்து மல்ஹோத்ரா மருத்துவ விடுப்பில் சென்றதால் விசாரணை தொடங்குவது ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் 5 நீதிபதிகள் அமர்வு முன்பு சபரிமலை விவகாரம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை தொடங்கியது. அப்போது நாயர் சர்வீஸ் சொசைட்டி அமைப்பின் சார்பில் சார்பில் மூத்த வழக்கறிஞர் பராசரன் ஆஜானார். அவர் வாதிடுகையில், ‘‘சபரிமலை ஐயப்பன் கோயிலில் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரியம் வேறானது.

கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கவில்லை என்ற வாதத்தை இதனுடன் பொருத்தி பார்க்க முடியாது. இந்திய குடிமக்கள் தங்கள் பாரம்பரிய பண்பாட்டை பின்பற்ற அரசியல் சட்டம் அனுமதி வழங்கியுள்ளது. சபரிமலையில் கடை பிடிக்கும் நடைமுறைகள் பாரம்பரியம் சார்ந்தது, அது தீண்டாமை அல்ல’’ எனக் கூறினார்.                                                                            

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x