புல்வாமா தாக்குதல் கோழைத்தனமான செயல்: பாலிவுட் நடிகர்கள் கண்டனம்

புல்வாமா தாக்குதல் கோழைத்தனமான செயல்: பாலிவுட் நடிகர்கள் கண்டனம்
Updated on
1 min read

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாத தாக்குதலை நடத்தியதற்காக, அக்ஷய் குமார், ரன்வீர் சிங், பிரியங்கா சோப்ரா மற்றும் பல பாலிவுட் பிரபலங்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், ஜெய்ஷ்-இ-முகம்மது தற்கொலைப்படை வீரர் நடத்திய தாக்குதலில் 45 பேர் உயிரிழந்தனர். பலர் காயமுற்றனர். இக்கோரச் சம்பவத்தல் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப்படை தீவிரவாதி ராணுவத்தினர் சென்ற பேருந்துமீது 350 கிலோ வெடிபொருட்களுடன் காரை மோதி வெடிக்கச் செய்தார்.

பாலிவுட் திரைக்கலைஞர்கள் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களிலும் ட்விட்டர் தளத்திலும் பதிவிட்ட கருத்துக்கள் வருமாறு:

ஷபானா ஆஸ்மி:

இந்த கொடூரத் தாக்குதலை அனுமதிக்கக் கூடாது? இந்த கொலைவெறித் தாக்குதல் மூளையற்றவர்களின் செயல். மனித உயிர்களின் மீது இவ்வளவு அலட்சியமா? புல்வாமாவிலிருந்து வந்த இச்செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். சிஆர்பிஎப் படைமீது நிகழ்த்தப்பட்ட இந்த மோசமான தீவிரவாதத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ரிஷிகபூர்:

முழுமையான கோழைத்தனமான செயல். இந்த கொடூரமான குற்றம் செய்தவர்கள் காஷ்மீர் மக்களுடன் நண்பர்களாக இருக்க முடியாது. நாங்கள் வஞ்சிக்கப்பட்ட குடும்பத்தினருடன் நிற்கிறோம்

அக்ஷய் குமார்:

புல்வாமாவில் நடந்துள்ள சிஆர்பிஎப் வீரர்கள் மீதான கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் நமது நம்பிக்கையை தகர்த்துவிட்டது. உயிரிழந்தவர்களின் ஆத்மாக்களுக்கு அமைதியையும் துயருற்ற குடும்பத்தினருக்கு வலிமையையும் கடவுள் தரவேண்டும். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்போம். இச்சம்பவத்தை நாம் மறக்க முடியாது.

சல்மான் கான்:

நம் நாட்டின் அன்பிற்குரிய வீரர்களுக்கும் நமது குடும்பங்களைக் காப்பாற்ற தங்கள் இன்னுயிரைத் தந்தவர்களின் குடும்பத்தினருக்கும் என் இதயம் இரங்குகிறது.

ரன்வீர் சிங்:

நம் துணிச்சலான ஜவான்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல். வருத்தமாகவும் கோபமாகவும்இருக்கிறது.

பிரியங்கா சோப்ரா: முற்றிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  #Pulwama...தாக்குதல். வெறுப்பு எப்போதும் விடை அல்ல. உயிர்தியாகம் செய்த ஜவான்களின் குடும்பத்தினருக்கும் காயம்பட்ட சிஆர்பிஎப் வீரர்களுக்கும் பலம் சேரட்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in