‘‘பாகிஸ்தானின் தூதர் சவுதி இளவரசர் வருகிறார்’’ - மெகபூபா முப்தியை சரமாரியாக விமர்சித்த நெட்டிசன்கள்

‘‘பாகிஸ்தானின் தூதர் சவுதி இளவரசர் வருகிறார்’’ - மெகபூபா முப்தியை சரமாரியாக விமர்சித்த நெட்டிசன்கள்
Updated on
1 min read

சவுதி இளவரசர் பின் சல்மான் நாளை இந்தியா வரவுள்ள நிலையில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி மத்திய அரசை விமர்சித்து வெளியிட்டுள்ள ட்வீட் பெரும் சர்ச்சையாகியுள்ளது. அவருக்கு நெட்டிசன்கள் பலரும் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

புல்வாமா தாக்குதல் சம்பவத்தால் இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் சூழல் நிலவி வருகிறது. இதனால் பாகிஸ்தானுக்கு வருகை தர திட்டமிட்டு இருந்த சவுதி இளவரசர் பின் சல்மான் மூன்று நாள் தாமதத்துக்கு பிறகு பாகிஸ்தான் சென்றுள்ளார்.

பாகிஸ்தான் சென்ற சவுதி இளவரசர் சல்மானை பாகிஸ்தான் நாட்டின் வழக்கமாக பின்பற்றப்படம் வழக்கமான அரசு நடைமுறைகளை புறந்தள்ளி விட்டு தனது காரில் அழைத்து வந்தார் பிரதமர் இம்ரான் கான். காரை இம்ரான் கானே ஓட்டி வந்தார்.

இதைத்தொடர்ந்து இரு தலைவர்களின் சந்திப்பில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அத்துடன், ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் உதவித்தொகை மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களும் செய்யப்பட்டன.

மெகபூபா முப்தி அவர்களே பிரிவினைவாதியை ஆதரிக்கும் உங்களுக்கு தர்மசங்கடமான சூழலாக தான தெரியும் என வேறு சிலர் கூறியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in