Published : 18 Feb 2019 05:58 PM
Last Updated : 18 Feb 2019 05:58 PM

சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம்; பாக்.கில் படம் வெளியாகாது- டோட்டல் தமால் படக்குழு அதிரடி

ஜம்மு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில், 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பல்வேறு மாநிலங்களின் சார்பில் நிதியுதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. பாலிவுட் வீரர்கள், விளையாட்டு வீரர்கள், பிரபலங்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் எனப் பலதரப்பினர் தங்களால் இயன்ற தொகையை அளித்துவருகின்றனர்.

 

இந்த வகையில்,  'டோட்டல் தமால்' படக்குழு சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் தொகையை அறிவித்துள்ளது. அஜய் தேவ்கன், மாதுரி தீட்சித், ரிதேஷ் தேஷ்முக், ஈஷா குப்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் படம் 'டோட்டல் தமால்'. இப்படத்தில் நடித்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகிய அனைவரும் இணைந்து பணத்தை அளிக்க உள்ளனர்.

 

இந்நிலையில், புல்வாமா தாக்குதலால் நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள சூழலில், பாகிஸ்தானில் படம் வெளியாகாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை அஜய் தேவ்கன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

முன்னதாக பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் அக்‌ஷய் குமார் ஆகியோர் வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x