

காஷ்மீரில் இன்று காலை நடந்த துப்பாக்ச் சண்டையில் அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் இருவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸார் தெரிவித்த விவரம் வருமாறு:
புல்வாமா மாவட்டத்தில் சர்வதேச எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
அப்போது தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டார்.
துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த தீவிரவாதிகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. மேலும் அவர் எந்த தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்பதையும் கண்டறியும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.