

ஃபிட்னஸ் ட்வீட்டுக்கு மட்டும் உலகில் உள்ள அனைத்து நேரத்தையும் தன் வசம் வைத்திருக்கும் பிரதமருக்கு நமது வீரர்கள் மாயமானது குறித்து மட்டும் ஒரு வார்த்தைகூட சொல்ல இயலாதா? என சாடியிருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடக பிரிவு பொறுப்பாளர் திவ்யா ஸ்பந்தனா.
பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிப்பதி எல்லைகள் கடந்து சொந்த கட்சியின் மேலிடத்தின் அதிருப்தியை சம்பாதித்தவர் திவ்யா ஸ்பந்தனா.
அந்த அளவுக்கு அன்றாடம் அவரது ட்வீட்களில் பிரதமர் மீதான விமர்சனம் இருக்கும்.
இந்நிலையில்தான் திவ்யா ஸ்பந்தனா தனது ட்விட்டரில், "ஃபிட்னஸ் ட்வீட்டுக்கு மட்டும் உலகில் உள்ள அனைத்து நேரத்தையும் தன் வசம் வைத்திருக்கும் பிரதமருக்கு நமது வீரர்கள் மாயமானது குறித்து மட்டும் ஒரு வார்த்தைகூட சொல்ல நேரமில்லையா?
எல்லையில் ராணுவம் நடத்தும் தாக்குதல்களுக்கு மட்டும் மார்தட்டி பெருமிதம் கொள்கிறார். ஆனால், உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்காக மனமிறங்கி உணர்வை வெளிப்படுத்துவதில்லையே" எனப் பதிவிட்டுள்ளார்.