வரிவிதிப்புக்குரிய வருமானம் ரூ.5 லட்சமாக இருந்தால் முழு வரி விலக்கு; மக்களவையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்: 12 கோடி விவசாயிகளுக்கு ரூ.6,000 நிதியுதவி; அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க புதிய திட்டம்

வரிவிதிப்புக்குரிய வருமானம் ரூ.5 லட்சமாக இருந்தால் முழு வரி விலக்கு; மக்களவையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்: 12 கோடி விவசாயிகளுக்கு ரூ.6,000 நிதியுதவி; அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க புதிய திட்டம்
Updated on
2 min read

மத்திய இடைக்கால பட்ஜெட் மக்களவை யில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் நடுத்தர வர்க்க மக்கள், விவசாயி கள், அமைப்புசாரா தொழிலாளர் களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப் பட்டுள்ளன.

தனிநபரின் வரிவிதிப்புக்குரிய வருமானம் ரூ.5 லட்சம் வரை இருந் தால் முழு வரி விலக்கு அளிக்கப்படும். சுமார் 12 கோடி குறு, சிறு விவசாயி களுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படும். அமைப்புசாரா தொழி லாளர்களுக்கு ரூ.3,000 ஓய்வூதியம் வழங்குவதற்கான புதிய திட்டம் என்பன உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.

வருமான வரி சலுகை

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதன்காரணமாக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம் நிதித் துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. மத்திய இடைக்கால பட்ஜெட்டை மக்களவையில் அவர் நேற்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:

தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் எவ்வித மாற்றமும் செய்யப்பட வில்லை. கடந்த ஆண்டு வரிவிகிதமே தொடரும். எனினும் வரி விதிப்புக்குரிய வருமானம் ரூ. 5 லட்சம் வரை உள்ளவர் களுக்கு முழுமையான வரிவிலக்கு வழங்கப்படும். மேலும் ஆண்டு வருமானம் ரூ.6.5 லட்சம் வரை உள்ளவர்கள், வைப்பு நிதி, பரிந்துரைக்கப்பட்ட பங்குகளில் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்தால் அவர்களும் வரி செலுத்த வேண்டிய தில்லை. இதன்மூலம் 3 கோடிக்கும் மேற்பட்ட நடுத்தர வர்க்க மக்கள் பயன் பெறுவார்கள். வருமான வரி கணக்கு தாக்கல் செய்த 24 மணி நேரத்தில் பரிசீலிக்கப்படும்.

விவசாயிகளுக்கு நிதியுதவி

இரண்டு ஹெக்டேருக்கும் (5 ஏக்கர்) குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும். இந்த தொகை 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இத்திட்டத்துக்கு ரூ.75,000 கோடி செலவா கும். இதன்மூலம் சுமார் 12 கோடி குறு, சிறு விவசாயிகள் பயன் பெறுவார்கள்.

இயற்கை பேரிடர்களால் பாதிக்கப் படும் விவசாயிகளுக்கு பயிர்க்கடனில் 2 சதவீத வட்டி தள்ளுபடி, கடனை முறையாக செலுத்தும் விவசாயிகளுக்கு 3 சதவீத வட்டி தள்ளுபடி செய்யப்படும். மீனவர்களின் நலன், மீன் வள மேம்பாட்டுக்காக தனி அமைச்சகம் ஏற்படுத்தப்படும்.

தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்

அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக பிரதம மந்திரி ஷ்ராம் யோகி மந்தன் என்ற புதிய ஓய்வூதிய திட்டம் தொடங் கப்படும். மாதம் ரூ.15,000 வரை ஊதியம் பெறும் தொழிலாளர்கள் இத்திட்டத்தில் இணைக்கப்படுவார்கள். 18 வயதுடையவர்கள் மாதம் ரூ.55-ம், 29 வயதுடையவர்கள் மாதம் ரூ.100-ம் பிரிமியம் செலுத்த வேண்டும். 60 வயதுக்குப் பிறகு தொழிலாளர் களுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கப்படும்.

நாடோடி மக்களின் மேம்பாட்டுக்காக நலவாரியம் அமைக்கப்படும். நூறு நாள் வேலை திட்டம் என்றழைக்கப்படும் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத் துக்கு ரூ.60,000 கோடி, கிராமப்புற சாலை பணிக்கு ரூ.19,000 கோடி ஒதுக்கப் படுகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் கிராமங்கள் டிஜிட்டல் மய மாக்கப்படும். செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சிக்காக தேசிய மையம் அமைக்கப்படும்.

முதல்முறையாக வீடு வாங்குபவர் களுக்கு மட்டுமே தற்போது வருமான வரிச் சலுகை வழங்கப்படுகிறது. இனிமேல் இரண்டாவது வீடு வாங்குபவர்களுக்கும் வரிச் சலுகை அளிக்கப்படும். வீட்டு வாடகையில் இருந்து கிடைக்கும் வருமானத்துக்கான வரிவிலக்கு வரம்பு ரூ.1.8 லட்சத்தில் இருந்து ரூ.2.4 லட்சமாக உயர்த்தப்படுகிறது. பணிக்கொடை உச்ச வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்படுகிறது. வங்கி, அஞ்சலக முதலீடுகள் மூலம் கிடைக்கும் ரூ.50,000 வரையிலான வட்டிக்கு வரிப் பிடித்தம் செய்யப்படாது.

ராணுவத்துக்கு ரூ.3 லட்சம் கோடி

கடந்த பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ரூ.2.95 லட்சம் கோடி ஒதுக்கீடு செய் யப்பட்டது. இந்த நிதியாண்டில் ராணுவத் துக்கு ரூ.3.05 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ராணுவத்தில் ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்துக்காக இதுவரை ரூ.35,000 கோடி வழங்கப் பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் நலிந்த பிரிவின ருக்காக 10 சதவீத இடஒதுக்கீடு அமல் படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கல்வி நிறுவனங்களில் 25 சதவீத கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும். நாடு முழுவதும் 21 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உள்ளன. இதில் கடந்த நான்கரை ஆண்டுகளில் மட்டும் 14 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அறிவிக்கப்பட்டன. விரைவில் ஹரியாணாவில் 22-வது எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்.

அனைவருக்கும் அனைத்து அடிப் படை வசதிகளும் கிடைக்கும் வகையில் வரும் 2022-ம் ஆண்டுக்குள் புதிய இந்தியா உதயமாகும்.

வரும் 2030-ம் ஆண்டுக்கான 10 அம்ச திட்டமும் இப்போதே வெளியிடப்படு கிறது. வளமான வாழ்க்கை, டிஜிட்டல் இந்தியா, சுற்றுச்சூழலை பாதிக்காத மின்சார வாகனங்கள், தொழில்துறையை விரிவுபடுத்தி வேலைவாய்ப்புகளை பெருக்குதல், நதிகளை தூய்மைப்படுத்து தல்-சுத்தமான குடிநீர்-சொட்டுநீர் பாச னம், துறைமுகங்கள் மேம்பாடு, விண்வெளி ஆராய்ச்சி, உணவு உற்பத்தியில் தன்னிறைவு- இயற்கை வேளாண்மை, ஆயுஷ்மான் பாரத் மூலம் ஆரோக்கியமான இந்தியா, திறமையான நிர்வாகம் ஆகிய 10 அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இவ்வாறு பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in