

டெல்லி ஓட்டலில் நேற்று நேரிட்ட தீ விபத் தில் 17 பேர் உயிரிழந்தனர். இதில் 2 பேர் தமிழகத்தின் திருப்பூரைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
மத்திய டெல்லியின் கரோல் பாக் பகுதியில் ‘அர்பித் பேலஸ்' ஓட்டல் உள்ளது. மூன்று நட்சத்திர அந்தஸ்து பெற்ற இந்த ஓட்டலில் நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. ஓட்டலின் இரண்டாவது தளத்தில் ஏற்பட்ட தீ இதர தளங்களுக்கும் மளமளவென்று பரவியது.
சுமார் 150-க்கும் மேற்பட்டோர் ஓட்டலில் தங்கியிருந்தனர். ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த அவர்கள் அலறியடித்து ஓடினர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு 25-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. பல மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது.
இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த அரவிந்த் சுகுமாறன், நந்தகுமார் உட்பட 17 பேர் உயிரிழந்தனர்.
பின்னலாடை அதிகாரிகள்
திருப்பூர் அம்மாபாளையத்தை அடுத்த ராக்கியாபாளையம் சொர்ணபுரி லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் சுகுமாறன் (40). இவர், பிச்சம்பாளையத்தில் உள்ள பிரபல பின்னலாடை உற்பத்தி குழுமத்துக்கு சொந்தமான நிறுவனத்தில் மெர்ச்சன்டைஸர் பணியில் இருந்தார். அதே நிறுவனத்தில் சோமனூரைச் சேர்ந்த, திருப்பூர் -பெருமாநல்லூர் சாலை யில் வசித்தவந்த நந்தகுமார் (33) என்பவரும் மெர்ச்சன்டைஸர் பணியில் இருந்தார்.
அலுவலக பணி சார்ந்த ஏற்றுமதியாளர் சந்திப்பில் பங்கேற்க, கோவையில் இருந்து விமானம் மூலமாக இருவரும் நேற்று முன் தினம் காலை டெல்லி சென்றனர். ஏற்றுமதி யாளர் சந்திப்புக் கூட்டம் முடிந்த பிறகு, அர்பித் பேலஸ் ஓட்டலில் தங்கியுள்ளனர். அங்கு நேரிட்ட தீ விபத்தில் சிக்கி பலியாகி உள்ளனர். இருவரது உயிரிழப்பை, டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட பின்னலாடை உற்பத்தி நிறுவன அதிகாரிகள் கூறியபோது, ‘இரு வரது குடும்பத்தினரும், உடல்களைப் பெற டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளனர்' என்றனர்.
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அதிகாரிகள் ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறும்போது, ‘இருவரது உடல்களும் டெல்லியில் உள்ள ஆர்.எம்.எல். மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளன. குடும்பத் தினர் கையெழுத்திட்ட பின்னரே பிரேத பரிசோதனைக்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும். இறந்தவர்களின் உறவி னர்கள் தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்கப்படுவார்கள். புதன்கிழமைக்குள் விமானத்தில் உடல்கள் அனுப்பிவைக் கப்படும்' என்றனர்.
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரி வால் கூறியபோது, ‘‘தீ விபத்து குறித்து உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. உயிரிழந்தோர் குடும்பங் களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.
மின்கசிவுதான் காரணம்
போலீஸார் கூறியபோது, ‘‘சமையல் அறையில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது” என்று தெரி வித்தனர்.
டெல்லி உள்துறை அமைச்சர் சத்யேந் திர ஜெயின் கூறியபோது, ‘‘ஓட்டலில் 4 தளங்கள் மட்டுமே கட்ட அனுமதி வழங் கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஓட்டலில் விதிகளை மீறி மேலும் 2 தளங்கள் கட்டப்பட் டுள்ளன. விதிமீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் கே.ஜே.அல் போன்ஸ் கூறியபோது, ‘‘ஓட்டலின் அவசர கால வழி மிகவும் குறுகலாக உள்ளது. அந்த வழியை அடைத்து வைத்துள்ளனர். அதனால் உயிரிழப்பு அதிகரித்துள்ளது” என்று தெரிவித்தார்.