Last Updated : 26 Feb, 2019 09:28 AM

 

Published : 26 Feb 2019 09:28 AM
Last Updated : 26 Feb 2019 09:28 AM

பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு பாஜக ஆட்சியில் எந்த ஊழலும் நடைபெறவில்லை: அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு பாஜக ஆட்சியில் எந்த ஊழலும் நடைபெறவில்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்.

பெங்களூருவில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற சிந்தனையாளர் பேரவை யின் கூட்டத்தில் சிறப்பு விருந் தினராக பங்கேற்ற மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிய தாவது:பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் கடந்த 5 ஆண்டு களாக மத்திய அரசு மக்களின் நலனுக்காக தீவிரமாக செயலாற்றி வருகிறது. மோடி ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் உழைத்து வருகிறார். அவரின் அயராத உழைப்பு, திறமை, அர்ப்பணிப்பு, ஆற்றல் ஆகியவற்றால் மற்ற அமைச்சர்கள் ஈர்க்கப்பட்டு, அவ ரைப் போல உழைத்து வரு கிறார்கள்.

50 ஆண்டுகளாக போதிய வளர்ச்சி இல்லாமல் இருந்த இந்தியாவை, 5 ஆண்டுகளில் யாரும் எதிர்பார்க்க முடியாத உயரத்துக்கு மோடி கொண்டு சென்றுள்ளார். கடந்த ஆட்சியோடு ஒப்பிட்டு பார்க்கும் போது, எங் களது ஆட்சியில் எவ்வித ஊழலும் நடைபெறவில்லை. தற்போதைய காஷ்மீர் தாக்குதலை தவிர, வேறு எந்த தாக்குதலும் பாஜக ஆட்சி யில் நடக்கவில்லை. எனவே மோடியின் ஆட்சியை மக்கள் இழக்க விரும்பவில்லை. மீண்டும் இதே அரசை தொடர வைப்பார் கள் என உறுதியாக நம்புகிறேன்.

பாஜகவை பொறுத்தவரை இந்த தேர்தல் மிகவும் முக்கிய மானது. கடந்த 2014 தேர்தலுக்கு உழைத்ததைக் காட்டிலும், இந்த தேர்தலுக்கு 100 மடங்கு அதிக மாக உழைக்க வேண்டும். ஒவ் வொருவரும் பாஜகவின் சேவக ராக மாறி, வாக்கு சேகரிக்க வேண்டும். இந்த முறை மோடி வெற்றி பெறாவிட்டால், நாடு 50 ஆண்டுகள் பின்னோக்கி விடும். வரலாற்றில் எந்த நாட்டுக்கும் கிடைக்காத தலைவர், நமக்கு கிடைத்திருக்கிறார். அவரை வெற்றி பெற வைக்க வேண்டியது ஒவ்வொரு இந்தியரின் கடமை. ராமர் கோயில் கட்ட நிலம் ஒதுக்குவது தொடர்பாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது. இதில் மத்திய அரசு செயல்படவே இல்லை என கூற முடியாது. ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் உள்ளிட்ட விவகாரங்களில் காங்கிரஸ் அடிப் படை ஆதாரங்கள் இல்லாமல் மோடியை விமர்சித்து வருகிறது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x