

உத்தரபிரதேசத்தில் ரூ.40 லட்சம் வங்கிப் பணத்துடன் தப்ப முயன்ற கொள்ளையன், மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்ததால் போலீஸில் சிக்கினான்.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள செக்டார் 82 பகுதியில் பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. இந்த ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வைப்பதற் காக, நேற்று முன்தினம் காலையில், தனியார் நிறுவன ஊழியர்கள் சிலர் அங்கு வந்தனர். அவர்களுடன் போலீஸார் சிலரும் வந்திருந்தனர்.
அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், கண்ணி மைக்கும் நேரத்தில் அவர் களிடமிருந்த ரூ.40 லட்சம் பணப்பையை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்களில் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
ஆனால், ஒரு சில நிமிடங்களிலேயே, அவர்களின் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்த னர். இதில், அவர்களிடமிருந்த பணம் சாலை எங்கும் சிதறியது. அவற்றினை, அவ்வழியாக சென்ற பொதுமக்கள் சிலர் எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித் தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து உடனடியாக அங்கு வந்த போலீஸார், கொள்ளையன் ஒருவனை கைது செய்தனர். மற் றொருவர் அங்கிருந்து தப்பிவிட்டார். விசாரணை யில், அவர் புலந்த் சாகர் மாவட்டத்தைச் சேர்ந்த நாஹே (35) என்பது தெரியவந்தது.
ரூ.19.5 லட்சம் பறிமுதல்
அவரிடமிருந்த ரூ.19.5 லட்சம் வங்கிப் பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்நிலை யில், தப்பியோடிய கொள்ளை யனையும், சாலையில் சிதறிய பணத்தை எடுத்துச் சென்றவர் களையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். - பிடிஐ