விமானப்படை தாக்குதல்: 40 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த சாதனை

விமானப்படை தாக்குதல்: 40 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த சாதனை
Updated on
1 min read

இந்திய விமானப்படை 40 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக மிகப்பெரிய தாக்குதல் நடத்தி இருப்பதாக தகவல் தெரிய வந்துள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது  இன்று  அதிகாலை 3.30 மணியளவில்  தாக்குதல் நடத்தின. 12 விமானங்கள், சுமார் 1000 கிலோ வெடிகுண்டைத் தீவிரவாத முகாம்கள் மீது வீசி, அவற்றை முற்றிலுமாக அழித்தன.

இதில் பாலாகோட், சாக்கோட்,  முஸாஃபராபாத் ஆகிய இடங்களில் தாக்குதல் நடந்துள்ளன. அங்கு இயங்கிவந்த முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளுக்கு பெரும் பின்னடைவாக இந்த நடவடிக்கை கருதப்படுகிறது.

விமானப்படை தாக்குதல் பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானுடன் 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய விமானப்படை பெரிய தாக்குதல் நடத்தி இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. கடந்த 1971-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்தபோரில் இந்திய விமானப்படைகள் பெரும் சாகசங்களை செய்தன.

பாகிஸ்தானுடன் நடந்த பல போர்களில் பொதுவாகவே தரைப்படையே தனது திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நாடு சுதந்திரமடைந்த முதல் போர் தொடங்கி சமீபத்தில் நடந்த கார்கில் போர் வரை பெரிய அளவில் தரைப்படைக்கே பெரும் பங்கு இருந்தது.

ஆனால் பாகிஸ்தானில் இருந்து வங்தேசம் பிரிந்து தனிநாடான 1971-ம் ஆண்டு நடந்தபோரில், விமானப்படையின் தேவை அதிகமாக இருந்தது. அப்போது இந்திய விமானப்படை வீரர்கள் பெரும் பங்காற்றி போரில் வென்றனர். 40 ஆண்டுகளுக்கு பிறகு எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை தாண்டிச் சென்று பாகிஸ்தானின் உட்பகுதிக்குள் நுழைந்து தற்போது தாக்குதல்  நடந்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in