Published : 10 Sep 2014 11:29 AM
Last Updated : 10 Sep 2014 11:29 AM

கோயில் படிக்கட்டுகளில் தலைகீழாக நடந்து வாக்கு சேகரித்த சுயேட்சை வேட்பாளர்

கோவை மருதமலை முருகன் கோயில் படிக்கட்டுகளில் தலைகீழாக நடந்து, மேயர் பதவிக்கு சுயேட்சையாகப் போட்டியிடும் வேட்பாளர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

கோவை மாநகராட்சிக்கான இடைத் தேர்தலில் 16 பேர் போட்டியிடுகின்றனர். இதில் கோவைப்புதூரை சேர்ந்த யோகா குரு சத்திரபதி (49), இரட்டை வாள் சின்னத்தில் சுயேட்சையாகப் போட்டியிடுகிறார்.

மேயர் தேர்தல் வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் அவர், கோவை மருதமலை முருகன் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு வந்தார். பின்னர், கோயில் படிக்கட்டுகளில் தலை கீழாக தனது இரண்டு கைகளை ஊன்றி நடந்து வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

எம்.ஏ. தத்துவம் படித்துள்ள தன்னை வெற்றி பெற வைத்தால் கோவையை பசுமையான மற்றும் தூய்மையான நகரமாக மாற்றுவேன். ஊழல் அற்ற நிர்வாகம் தருவேன். போக்குவரத்து நெரிசலைப் போக்க முக்கிய சாலைகளில் மும்பையைப் போல் பறக்கும் நடை பாதைகள் அமைப்பேன். விவேகானந்தர் நூறு இளைஞர்களைக் கொடுங்கள் உலகையே மாற்றிக் காட்டுகிறேன் என்று கூறினார். நான் எனக்கு வாக்களியுங்கள் நான் வெற்றிபெற்றால் கோவையை மாற்றிக் காட்டுகிறேன் என வாக்குறுதி அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x