

காஷ்மீரில் இன்று மதியத்திற்குப் பிறகு பள்ளி வளாகத்தில் குண்டுவெடித்ததில் 10 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்த விவரம்:
காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் சிங்கூ நார்பால் பள்ளிக்கூட வளாகத்தில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
குண்டுவெடிப்பில் காயமுற்ற மாணவர்கள் அனைவரும் புல்வாமா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் வெடிகுண்டு தாக்குதலுக்கு ஆளானதைக் கேள்வியுற்ற பெற்றோர்கள் மாவட்ட மருத்துவமனைக்கு வெளியே சூழ்ந்துள்ளனர்.
படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவரும் இம்மாணவர்கள் தற்போது அபாய கட்டத்தை கடந்துவிட்டதாக கூறப்படுகிறது.
மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.