நிர்பயாவுக்கு சிகிச்சை அளித்த நர்ஸுக்கு பாலியல் வன்கொடுமை: பா.ஜ.க கண்டனம்

நிர்பயாவுக்கு சிகிச்சை அளித்த நர்ஸுக்கு பாலியல் வன்கொடுமை: பா.ஜ.க கண்டனம்
Updated on
1 min read

கடந்த 2012ம் ஆண்டு டெல்லியில் 'கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு' உள்ளான நிர்பயாவுக்குச் சிகிச்சையளித்த நர்ஸ், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியிருக்கிறார். இதைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி இந்தச் சம்பவத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த திங்கள்கிழமை பஞ்சாப் மாநிலத்தின் மன்ஸா மாவட்டத்தில் 7 பேர் கொண்ட கும்பலால் நிர்பயாவுக்குச் சிகிச்சை அளித்த நர்ஸ் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். அத்துடன் அவரிடமிருந்த பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டன.

இதுகுறித்து பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறும்போது, "இது வேதனைப்படக் கூடிய விஷயம். அவர் நிர்பயாவின் நர்ஸ் மட்டுமல்ல. அவர் ஒரு பெண். இது கண்டனத்துக்குரியது மட்டுமல்ல, நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒன்று. இதற்குக் காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்" என்றார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக டெல்லி பெண்கள் ஆணையத்தின் தலைவர் பர்கா ஷுக்லா சிங் கூறும்போது, "இது சட்டம் தொடர்பான விஷயம் மாத்திரம் அல்ல. இந்தச் சம்பவத்துக்கு ஒட்டு மொத்த சமூகமும் பொறுப்பேற்க வேண்டும். சமூகம் விழித்துக் கொள்ளாத வரை இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்க முடியாது" என்றார். பாலியல் வன்கொடுமை ஆளான அந்த நர்ஸ் தன்னை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத் துவதை மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in