Last Updated : 16 Feb, 2019 07:52 AM

 

Published : 16 Feb 2019 07:52 AM
Last Updated : 16 Feb 2019 07:52 AM

காஷ்மீர் புல்வாமா பகுதியில் தாக்குதல் எதிரொலி; தீவிரவாதிகளை ஒழித்துக்கட்ட ராணுவத்துக்கு அதிகாரம்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு; எல்லையில் போர் பதற்றம்; ஜம்மு-காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு

‘‘காஷ்மீர் புல்வாமா பகுதியில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மிகப்பெரிய விலையைக் கொடுப் பார்கள். அவர்கள் கடும் பின் விளைவுகளைச் சந்திப்பார்கள். தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டு வதற்கான நடவடிக்கை எடுக்க பாதுகாப்புப் படையினருக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது’’ என்று பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாகக் கூறினார்.

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்று கொண்டிருந்த பேருந்து மீது, தற்கொலைப் படை தீவிரவாதி ஒருவன் கடந்த வியாழக்கிழமை காரை மோதி தாக்குதல் நடத்தினான். இதில் வீரர்கள் 40 பேர் பலியாயி னர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ் தான் ஆதரவு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப் பேற்றுள்ளது.

இந்நிலையில், டெல்லி - வார ணாசி வந்தே பாரத் புதிய ரயில் தொடக்க விழா திட்டமிட்டபடி டெல்லியில் நேற்று நடைபெற்றது. தீவிரவாத தாக்குதலால் உற்சாகம் இல்லாமல் நடந்த இந்நிகழ்ச்சியில் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், ரயில்வே வாரிய அதிகாரி கள் பங்கேற்றனர். வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத் துத் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:

தீவிரவாத தாக்குதலால் இந்தியாவை வலுவிழக்கச் செய்ய முடியாது. புல்வாமா தாக்குதலுக் குப் பின்னணியில் உள்ளவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படு வார்கள். தீவிரவாதிகள் மிகப்பெரிய விலையைக் கொடுக்க நேரிடும். அவர்கள் கடும் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

இந்தத் தாக்குதலுக்குப் பிறகு தீவிரவாதிகளுக்கு எதிராக எப் போது, எங்கு, எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுப்பது போன்ற விஷயங்களில் முடிவெடுக்க நமது பாதுகாப்புப் படையினருக்கு முழு சுதந்திரமும் அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலால் நாட்டு மக்கள் கொதித்துப் போயுள்ளனர். எனவே, இந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.

நமது அண்டை நாடு (பாகிஸ் தான்) சர்வதேச அளவில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளது. அதனால், தீவிரவாத தாக்குதல் மூலம் நம்மை தொந்தரவு செய்ய நினைக்கிறது. ஆனால், அவர்களது திட்டம் நிறைவேறாது. புல்வாமா தாக்கு தலில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த அனைத்து நாடுகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நேரத்தில் தீவிரவாதத்தை ஒடுக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இந்த துயரமான நிலையில், புல்வாமா தாக்குதலை அரசிய லாக்க வேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறேன். மத்திய அரசை விமர்சிப்பவர்களின் உணர்வுகளை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால், இந்தத் தாக்குதலால் நாடு கொந்தளிப்பில் உள்ளது. இந்த நேரத்தில் அரசியல் கட்சியினர் ஒருமித்த கருத்துடன் இருக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

வீரர்கள் தியாகம் வீண்போகாது

உத்தரபிரதேச மாநிலம் பண்டல் கண்ட் பகுதியில் பாதுகாப்பு வழித்தடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி கூறும்போது, ‘‘தினசரி செலவுகளுக்குக் கூட பணமில்லா மல் பிச்சைப் பாத்திரம் ஏந்தி, பல்வேறு நாடுகளிடம் அண்டை நாடு கெஞ்சிக் கொண்டிருக்கிறது. அந்த விரக்தியின் வெளிப்பாடு தான் புல்வாமாவில் நடத்திய தாக்குதல்’’ என்று கடுமையாக கூறினார்.

பிரதமர் மோடி மேலும் கூறிய தாவது:

இந்தியா தேர்ந்தெடுத்த பாதை மற்றும் கொள்கைகளால் பகல் இரவு பாராமல் முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஆனால், அண்டை நாடு பரிதாபமான நிலை யில் உள்ளது. தீவிரவாத தாக்கு தல்கள் மூலம் இந்தியாவையும் அதேபோன்ற நிலைக்கு மாற்ற அண்டை நாடு நினைக்கிறது. ஆனால், ஒவ்வொரு இந்தியரும் உச்சகட்ட கோபத்தில் இருக் கின்றனர். இந்த நேரத்தில் 130 கோடி இந்திய மக்களுக்குக் கூறிக் கொள்கிறேன். சிஆர்பிஎப் வீரர்களின் உயிர்த் தியாகம் வீண் போகாது.

அதற்காகத்தான் முதல் முறை யாக தீவிரவாதத்துக்கு எதிராக எப் போது, எங்கு, எப்படி நடவடிக்கை எடுப்பது என்பது போன்ற முடிவு களை எடுக்க பாதுகாப்புப் படையினருக்கு முழு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மோடி பேசினார்.

புல்வாமா தாக்குதலை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தலை மையில் பாதுகாப்புக்கான அமைச் சரவைக் கூட்டம் டெல்லியில் நேற்று காலை நடைபெற்றது. இதில் அமைச்சர் அருண்ஜேட்லி உட்பட பலர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் தீவிரமாக ஆலோ சனை நடத்தியதாகக் கூறப்படு கிறது.

அனைத்துக் கட்சிக் கூட்டம்

தாக்குதல் தொடர்பாகவும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கவும் பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற கட்டிடத் தில் அனைத்துக் கட்சிக் கூட்டத் துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தூதரை அழைத்து கண்டனம்

இதனிடையே தாக்குதல் தொடர்பாக இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சோஹைல் முகமதுவை நேரில் அழைத்து இந்தியா தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. மேலும் பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதர் அஜய் பிசாரியாவை உடனடி யாக டெல்லி திரும்பவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தூதரை திரும்ப அழைப்பதன் மூலம் பாகிஸ்தானை தனிமைப்படுத்தவும் இந்தியா முடிவு செய்துள்ளது.

நட்பு நாடு அந்தஸ்து ரத்து

இந்தியாவுக்கு மிகவும் வேண் டப்பட்ட நாடு பாகிஸ்தான் என்ற அந்தஸ்தை இந்தியா ரத்து செய்துள்ளது. இதனால் பாகிஸ் தானில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு வழங்கப்பட்டு வந்த வரிச்சலுகை இனி ரத்தாகும் என்று தெரிகிறது.

ஜம்மு-காஷ்மீரின் ஜம்மு நகரின் பல்வேறு இடங்களில் ஊர டங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

பாகிஸ்தான் தூதரை அழைத்துக் கண்டித்தது, பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதர் டெல்லி திரும்ப அழைப்பு, ஜம்முவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு போன்ற நட வடிக்கைகளை இந்தியா எடுத் துள்ளதால் இரு நாட்டு எல்லை யில் போர் பதற்றம் காணப்படு கிறது.

உலக நாடுகள் கண்டனம்

புல்வாமா சம்பவத்துக்கு அமெ ரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, ஆப் கானிஸ்தான், இஸ்ரேல் உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனம் தெரிவித் துள்ளன.

பழிதீர்ப்போம்: சிஆர்பிஎப் படை உறுதி

ஜம்மு-காஷ்மீரில் தங்கள் படை வீரர்கள் மீது நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கு கட்டாயம் பழிதீர்ப்போம் என மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்) தெரிவித்திருக்கிறது.

புல்வாமா தாக்குதல் தொடர்பாக சிஆர்பிஎப் துணை ராணுவப் படையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிடப்பட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் உயிர் தியாகம் செய்த எங்கள் சகோதரர்களுக்கு தலைவணங்குகிறோம். இந்த கோழைத்தனமான தாக்குதலை நாங்கள் என்றும் மறக்க மாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம். இதற்கு விரைவில் பழிதீர்க்கப்படும். இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x