Published : 11 Feb 2019 01:06 PM
Last Updated : 11 Feb 2019 01:06 PM

மாடா? மனிதனா? என்றால் மனிதனுக்குத்தான் முக்கியத்துவம் தர வேண்டும்: சச்சின் பைலட் வேண்டுகோள்

புனிதமான விலங்குகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் எனக்கும் நம்பிக்கை உண்டு; ஆனால் மாடா? மனிதனா? என்றால் மனிதனுக்குத்தான் முக்கியவத்துவம் தர வேண்டும் என்று சச்சின் பைலட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெங்களூருவில்  சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களில் முக்கியப் பிரமுகர்களை ஒன்றாகச் சந்திக்க வைக்கும் 'ஹடூல்' எனப்படும் கலந்துரையாடல் நிகழ்வுக்கு 'தி இந்து' (ஆங்கிலம்), ஏற்பாடு செய்திருந்தது.

அமித் பருவாவுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் கலந்துகொண்டார்

இதில் சச்சின் பைலட் பேசியதாவது:

''பசுக்கள் கொல்லப்படுவதற்கும் பசு கடத்தல் வழக்குகளுக்கும் தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்கிறது. மனிதர்களை மறந்துவிட்டு மாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பிரச்சினைகளில் மத்தியப் பிரதேச அரசால் மட்டுமே சிறப்பாகச் செயல்பட முடியும்.

ஆனால், என்னுடைய சொந்தக் கருத்து என்னவெனில் பெண்கள் மீது பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுபவர்களைத் தண்டிக்கவும், சக மனிதன் மீது மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொள்வதற்கும்,  கண்ணியமற்ற முறையில் சக மனிதனை தாக்கும் செயல்களுக்கும் கடுமையான சட்டங்களை உருவாக்க வேண்டும்.

புனிதமான விலங்குகளை காப்பாற்றுவது நல்லது. அதில் எனக்கும் நம்பிக்கை உண்டு. ஆனால், மாடா? மனிதனா? என்று வரும்போது மனிதனுக்குத்தான் முக்கியம் தரவேண்டும் என்று நான் நினைக்கிறேன். கமல்நாத் மத்தியப் பிரதேசத்திற்காக இப்பிரச்சினைகளில் முடிவெடுப்பதில் சிறந்தவர். ஆனால் ராஜஸ்தானுக்காக அல்ல என்பதுதான் எனது எண்ணம்''.

இவ்வாறு ராஜஸ்தான் துணை முதல்வர் பேசினார்.

தொடக்க நாள் நிகழ்வில் இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்ச கலந்துகொண்டார். நேற்று முன்தினம் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் ஜெய்ராம் ரமேஷ், ஸ்ரீநாத் ராகவன், சேகர்குப்தா மற்றும் மினி கபூர் ஆகியோர் கலந்துரையாடினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x